'தளபதி 67' வில்லன் சஞ்சய்தத்துக்கு இத்தனை கோடியா சம்பளம்?

  • IndiaGlitz, [Thursday,February 02 2023]

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புகள் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய வில்லனாக சஞ்சய் தத் நடிக்க இருக்கும் நிலையில் அவரது சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

‘தளபதி 67’ படத்தில் மெயின் வில்லனாக நடிக்கும் சஞ்சய்தத்துக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் ’கேஜிஎப் 2’ படத்தில் வில்லனாக நடித்த போதும் இதே தொகை தான் சம்பளம் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

சஞ்சய்தத் மட்டுமின்றி இந்த படத்தில் கௌதம் மேனன், அர்ஜுன், மன்சூர் அலிகான், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், மிஷ்கின், உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடிப்பதால் அவர்களுக்கும் பெரும் தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. மொத்த த்தில் விஜய் உள்பட படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் சம்பளம் மட்டுமே 200 கோடியை நெருங்கும் என்று கூறப்படுகிறது.
 

More News

14 மாதங்கள் பாலியல் சித்ரவதை.. ரஜினி, விஜயகாந்த் நடிகை திடுக்கிடும் புகார்..!

 ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்பட பல பிரபலங்களின் படங்களில் நடித்த நடிகை ஒருவர் தயாரிப்பாளர் ஒருவரால் தான் 14 மாதங்கள் பாலியல் சித்ரவதை செய்யப்பட்டதாக கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிம்புவின் செம டான்ஸ்.. 'நம்ம சத்தம்' பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ!

சிம்பு நடித்த 'பத்து தல' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் வரும் மார்ச் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது

உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள்.. உடல்நிலை குறித்து விஜய் ஆண்டனி டுவிட்..!

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி சமீபத்தில் மலேசியாவில் நடந்த படப்பிடிப்பில் காயம் அடைந்த நிலையில் அவர் தற்போது தனது உடல்நிலை குறித்த தகவலை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

முதல் வாரம் சிம்பு, இரண்டாம் வாரம் சூர்யா.. பக்கா திட்டமிடும் தயாரிப்பு நிறுவனம்..!

சூர்யா மற்றும் சிம்பு படங்களை தயாரித்து வரும் நிறுவனம் பிப்ரவரி முதல் வாரம் சிம்பு படத்தின் அப்டேட்டையும் இரண்டாவது வாரம் சூர்யா படத்தின் அப்டேட்டையும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள்

இந்தியாவில் முதல்முறையாக சென்னையில்.. சினிமா ரசிகர்களுக்கு செம நியூஸ்..!

இந்தியாவில் முதல்முறையாக விமான நிலையத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து விமான பயணிகளுக்கும், சென்னை சினிமா ரசிகர்களுக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது