திடீரென டிரெண்ட் ஆகும் 'தளபதி 68': தயாரிப்பாளர், இயக்குனர் இவர்கள் தானா?

  • IndiaGlitz, [Sunday,April 30 2023]

ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் திடீரென ’தளபதி 68’ என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருவது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் நடித்து வரும் 67வது திரைப்படம் ’லியோ’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் எப்போதுமே ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கும்போது அடுத்த திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை உறுதி செய்து விடுவார் என்றும் ஆரம்பகட்ட பணியும் தொடங்கி விடும் என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் ’வாரிசு’ திரைப்படம் தயாராகிக் கொண்டிருக்கும் போது 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்கப் போகிறார் என்று செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது ’லியோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படம் ’தளபதி 68’ படத்தின் செய்திகள் அவ்வப்போது கசிந்து வருகிறது.

இந்த நிலையில் ’தளபதி 68’ திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. ரசிகர் ஒருவரின் கேள்விக்கு ’தளபதி 68’ படம் குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று நடிகர் ஜீவா கூறியதை அடுத்து ரசிகர்கள் ’தளபதி 68’ படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தான் தயாரிக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

மேலும் ’தளபதி 68’ திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜ் தற்போது ‘ஜிகர்தண்டா 2’ என்ற படத்தை இயக்கி வரும் நிலையில், இந்த படத்தை முடித்தவுடன் அவர் ‘தளபதி 68’ படத்தின் ஆரம்பகட்ட பணியை தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ திரைப்படத்திற்கு பிறகு ’தளபதி 68’ படம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்க்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'பொன்னியின் செல்வன் 2' சிறப்பு காட்சி: IndiaGlitz-க்கு நன்றி தெரிவித்த பிரபலங்கள்..!

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். மேலும் உலகம்

சிரிப்பு தான் வருது.. ரஜினிகாந்த் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த ரோஜா..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று என்டி ராமராவ் அவர்களின் நூறாவது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு குறித்து பெருமையாக பேசினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

உதயநிதி-மாரி செல்வராஜின் 'மாமன்னன்' படத்தின் சூப்பர் அப்டேட்..!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஜான் கோகைன் - பூஜா தம்பதிக்கு பிறந்த குழந்தை.. பெயர் என்ன தெரியுமா?

அஜித் நடித்த 'துணிவு',  பா. ரஞ்சித் இயக்கிய 'சார்பாட்டா பரம்பரை' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நடிகர் ஜான் கோகைன் மனைவி பூஜா ராமச்சந்திரனுக்கு இன்று குழந்தை பிறந்துள்ள நிலையில் அந்த

கணவர், மகளுடன் 'PS 2' படம் பார்த்த ஐஸ்வர்யா ராய்.. வேற யாரெல்லாம் இருக்காங்க பாருங்க.. க்யூட் புகைப்படங்கள்..!

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டை குவித்து வருகிறது என்பதும் முதல் பாகத்தை விட இரண்டாம்