'லியோ' முன்பதிவு தொடங்குவது எப்போது? 'தளபதி 68' தயாரிப்பாளர் விளக்கம்..!

  • IndiaGlitz, [Tuesday,October 17 2023]

தளபதி விஜய் நடித்த 'லியோ’ திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் சென்னையில் உள்ள பல முக்கிய திரையரங்குகளில் இன்னும் முன்பதிவு தொடங்கவில்லை. காசி, உதயம் உள்பட ஒரு சில திரையரங்குகளில் மட்டுமே முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில் ’தளபதி 68’ படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தங்களுடைய ஏஜிஎஸ் நிறுவனத்தின் திரையரங்குகளில் 'லியோ’ திரைப்படத்தின் முன்பதிவு எப்போது என்பது குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.

'லியோ’ விநியோகிஸ்தர்கள் உடன் ஏற்பட்ட ஒரு சில விதிமுறை சிக்கல் காரணமாக முன்பதிவு இன்னும் தொடங்கவில்லை. அனைவருக்கும் ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். மேலும் பொறுமையாக காத்திருந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. இன்றும் மாலை 6:00 மணிக்குள் ஏதேனும் முன்னேற்றம் இருந்தால் 'லியோ’ முன்பதிவு குறித்த அப்டேட் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

எனவே இன்று மாலை 6 மணிக்கு மேல் ஏஜிஎஸ் நிறுவனத்தின் திரையரங்குகளில் முன்பதிவு தொடங்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதேபோல் சென்னையில் மற்ற முக்கிய திரையரங்குகளில் விரைவில் முன்பதிவு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

’லியோ’ திரைப்படத்தின் முதல் வார வசூலில் 75% தயாரிப்பு நிறுவனம் கேட்பதாகவும், வசூலில் 75 சதவீதத்தை தயாரிப்பு நிறுவனத்திற்கு கொடுத்தால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்றும் இதனால் தான் ’லியோ’ படத்தை திரையிடுவதற்கான ஒப்பந்தம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

More News

அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தில் இணையும் இன்னொரு பிரபல நடிகை.. வேற லெவல் எதிர்பார்ப்பு..!

அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' திரைப்படத்தில் ஏற்கனவே த்ரிஷா மற்றும் ரெஜினா  நடித்து வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது மூன்றாவது ஆக பிரபல நடிகை ஒருவர் இந்த படத்தில் இணைய

'லியோ' திரைப்படத்திற்கு 7 மணி காட்சிக்கு அனுமதி.. அரசின் அதிரடி உத்தரவு..!

 தளபதி விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் காட்சி 9 மணிக்கு தான் தொடங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது.

அஜித் படம் மிஸ் ஆனால் என்ன? 'தல' படத்தை டைரக்டர் செய்யும் விக்னேஷ் சிவன்..!

அஜித் நடிக்கும் திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில் அந்த படம் எதிர்பாராத வகையில் டிராப் செய்யப்பட்டு விட்டது. ஆனால் தற்போது அவர் தல தோனி நடிக்க உள்ள விளம்பர

'லியோ' படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி உண்டா? நீதிபதியின் அதிரடி உத்தரவு..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் அதிகாலை காட்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என தயாரிப்பு தரப்பு நீதிமன்றத்தை அணுகியது.

அதிகாலை 4 மணி காட்சி தேவையில்லை: திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டி..!

அதிகாலை 4 மணி காட்சி தேவை இல்லை என்பதே திரையரங்க உரிமையாளர்களின் கருத்து என்றும் 4 மணிக்கு பதிலாக காலை 7 மணிக்கு முதல் காட்சியை அனுமதிக்கலாம்