'தளபதி 69' படத்தில் முதலமைச்சராக நடிக்கிறாரா விஜய்? டைட்டில் இதுதானா?

  • IndiaGlitz, [Sunday,March 03 2024]

தளபதி விஜய் நடிக்க இருக்கும் கடைசி திரைப்படம் என்று கூறப்படும் ’தளபதி 69’ படத்தை இயக்கும் இயக்குனர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் கசிந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அட்லி, ஹெச் வினோத், கார்த்திக் சுப்புராஜ், ஆர்ஜே பாலாஜி, திரிவிக்ரம் உட்பட பல இயக்குனர்கள் ’தளபதி 69’ படத்தை இயக்க வாய்ப்பிருப்பதாகவும் இதில் விஜய் யாரை தேர்வு செய்யப் போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’தளபதி 69’ படத்தை இயக்குவது அட்லி என கடந்த சில மணி நேரங்களாக சமூக வலைதளத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது. ஏற்கனவே தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அட்லியிடம் தளபதி விஜய் முதலமைச்சர் ஆக நடிக்கும் ஒரு படத்தை நீங்கள் இயக்கினால் அந்த படத்திற்கு என்ன டைட்டில் வைப்பீர்கள் என்று கேட்டபோது ’ஆளப்போறான் தமிழன்’ என்ற டைட்டில் வைப்பேன் என்று அட்லீ கூறியிருந்தார்.

அந்த வகையில் சமீபத்தில் அட்லி, விஜய்யை சந்தித்து முதலமைச்சர் கேரக்டர் ஹீரோவாக உள்ள கதையை கூறியதாகவும் அந்த கதை விஜய்க்கு பிடித்து விட்டதால் ’தளபதி 69’ படம் இதுதான் என்றும் கூறப்பட்டு வருகிறது. மேலும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாகவும் அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது,.

ஏற்கனவே டிவிவி என்ற தெலுங்கு திரைப்பட நிறுவனம் தான் ’தளபதி 69’ படத்தை தயாரிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் பெயரும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இது போன்ற பல செய்திகள் அவ்வப்போது வந்து கொண்டிருந்தாலும் ’தளபதி 69’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே தயாரிப்பு நிறுவனம், இயக்குனர், மற்றும் இசையமைப்பாளர், நட்சத்திரங்கள் குறித்த தகவல் உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

ரஜினி மட்டும் சினிமாவுக்கு வரலைன்னா நான் சினிமாவுக்கே வந்திருக்க மாட்டேன்: 'மஞ்சும்மள் பாய்ஸ்' நடிகர்..!

ரஜினிகாந்த் என்பவர் மட்டும் சினிமாவுக்கு வரவில்லை என்றால் நான் சினிமாவுக்கு வந்திருக்க மாட்டேன் என 'மஞ்சும்மள் பாய்ஸ்' படத்தில் நடித்த நடிகர் விஜய் கௌரவ் என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டியில்

இன்று விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு செம்ம விருந்து இருக்கு.. 'சியான் 62' படத்தின் சூப்பர் தகவல்..!

நடிகர் விக்ரம் நடித்து முடித்துள்ள 'தங்கலான்' மற்றும் 'துருவ நட்சத்திரம்' ஆகிய இரண்டு படங்களும் அடுத்தடுத்து விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவரது 62 வது படத்தின் தகவல் சமீபத்தில் வெளியானது என்பதை

வரலட்சுமியின் வருங்கால கணவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதா? 15 வயதில் மகள் இருக்கிறாரா?

நடிகை வரலட்சுமி மற்றும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலை சச்தேவ் என்பவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்ததாக நேற்று புகைப்படங்களுடன் கூடிய தகவல் வெளியான நிலையில் வரலட்சுமியின்

எச்சரிக்கை இவைதான் தோல் புற்றுநோய் ஏற்படக்காரணமா ?

ஒவ்வொரு நாளுமே உங்கள் சருமம் உங்களிடம் என் ஆயுளை அதிகரிக்க செய் என சொல்லும் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா...............

மக்களவை தேர்தல்: பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் 2 திரையுலகினர் பெயர்..!

மக்களவைத் தேர்தல் விரைவில் வர இருக்கும் நிலையில் பாரதிய ஜனதா கட்சி சற்று முன் தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் இரண்டு திரை உலகினரை சேர்ந்தவர்களின் பெயர்கள்