கார்த்திக் சுப்புராஜ், அட்லி எல்லாம் இல்லை.. விஜய்யின் கடைசி படத்தை இயக்குவது இவரா?

  • IndiaGlitz, [Saturday,February 03 2024]

தளபதி விஜய் அரசியல் கட்சியை தொடங்கி விட்டதால் அவர் இன்னும் ஒரு படம் மட்டுமே நடிப்பார் என்று கூறப்பட்டது. எனவே விஜய்யின் 69 வது படம் அவருடைய கடைசி படமாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில் அந்த படத்தை இயக்குவது யாராக இருக்கும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் தான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் அடுத்ததாக அட்லியின் பெயரும் விஜய் பட இயக்குனர் பட்டியலில் இருந்தது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி விஜய்யின் அடுத்த படத்தை இயக்க இருப்பது எச் வினோத் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் விஜய்யை சந்தித்த எச் வினோத் ஒரு அரசியல் சம்பந்தப்பட்ட கதையை கூறியதாகவும் அந்த கதைக்கு விஜய் ஒப்பு கொண்டதாகவும் தெரிகிறது.

ஆனால் அதே நேரத்தில் எச் வினோத் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு ஒரு திரைப்படம் இயக்க ஒப்புக்கொண்டு இருந்த நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அனுமதி அளித்தால் விஜய் படத்தை இயக்க முடியும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் எச் வினோத்திற்கு என்ஒசி கொடுத்து விட்டதாகவும் எனவே விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவதில் அவருக்கு எந்த விதமான பிரச்சனை இல்லை என்றும் கூறப்படுகிறது.

எனவே எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் குறித்த தகவல் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது, இந்த படத்தை ’ஆர்ஆர்ஆர்’ உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்களை எடுத்த டிவிவி என்ற நிறுவனம்தான் தயாரிக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ரஜினி தப்பித்துவிட்டார், தூண்டிலில் விஜய் சிக்கிவிட்டார்: அதிமுக செய்தி தொடர்பாளர்..!

ரஜினியை கட்சி ஆரம்பிக்க சொல்லி பாஜக வலியுறுத்தியது என்றும் ஆனால் ரஜினி தப்பித்துவிட்டார் என்றும் பாஜகவின் தூண்டிலில் விஜய் சிக்கிவிட்டார் என்றும் அதிமுக செய்தி தொடர்பாளர்

பாலிவுட் பிரபலத்திற்கு ஜோடியாகும் த்ரிஷா.. அஜித் பட இயக்குனரின் மாஸ் திட்டம்..!

'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகை த்ரிஷா, விஜய், அஜித், கமல்ஹாசன், மோகன்லால் உள்ளிட்ட பிரபலங்களுடன் நடித்துவரும் நிலையில் தற்போது பாலிவுட் பிரபலம்

'கோட்' படத்தின் டெக்னாலஜியை பயன்படுத்தும் லோகேஷ்.. வேற லெவலில் 'தலைவர் 171'

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட டெக்னாலஜியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள 'தலைவர் 171' படத்தில் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

'பிகில்' பாண்டியம்மாளின் திருமண நிச்சயதார்த்தம்.. வைரல் புகைப்படங்கள், வீடியோ..!

நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மணிகண்டன் நடித்த 'லவ்வர்' படத்தின் இசை வெளியீடு..!

அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் 'லவ்வர்'. இதில் மணிகண்டன், ஸ்ரீகெளரி ப்ரியா, கண்ணா ரவி, ஹரினி, நிகிலா, ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.