திரையுலகில் விஜய்யின் 29 வருடங்கள்: காமன் டிபி போஸ்டர் வைரல்!

  • IndiaGlitz, [Saturday,December 04 2021]

தமிழ் திரையுலகில் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகிய 29 வருடங்கள் ஆனதை அடுத்து அவரது ரசிகர்கள் காமன் டிபி போஸ்டரை வெளியீடு கொண்டாடி வருகின்றனர்.

கடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி விஜய் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படமான ’நாளைய தீர்ப்பு’ என்ற திரைப்படம் வெளியானது. இந்த படம் வெளியாகி இன்றுடன் 29 வருடங்கள் ஆனதை அடுத்து விஜய்யின் 29 வருட திரையுலக வாழ்க்கை என்ற ஹேஸ்டேக் டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப காலத்தில் ரொமான்ஸ் படங்களில் நடித்து வந்த விஜய், அதன்பின் ஆக்ஷன் மற்றும் மாஸ் படங்களுக்கு மாறினார் என்பதும் அவரது ’கில்லி’ திரைப்படம் அவருக்கு மிகப் பெரிய மாஸ் ஹீரோ அந்தஸ்தை கொடுத்தது என்பது குறிபிடத்தக்கது. அதனை அடுத்து திருப்பாச்சி, சிவகாசி, போக்கிரி ஆகிய படங்கள் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் சமீபகால படங்கள் 200 கோடியை தாண்டி வசூல் செய்து வரும் நிலையில் பாக்ஸ் ஆபீஸ் ஹீரோவாகவும் அவர் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ’பீஸ்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் விஜய், முதல்முறையாக நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 29 வருடங்கள் திரையுலக வாழ்க்கையை நிறைவு செய்த விஜய்க்கு அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

காதலரிடம் ஏமாந்தாரா? போலீஸில் புகார் அளித்த பிக்பாஸ் ஜூலி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஜூலி தன்னுடைய காதலர் தன்னை ஏமாற்றி விட்டதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாநாடு வெற்றிக்குப் பிறகு பிரபல இயக்குநருடன் இணையும் நடிகர் சிம்பு!

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்த “மாநாடு“ திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிப்பெற்றுள்ளது.

லண்டனில் இருந்து சென்னை வந்த 2 பேருக்கு கொரோனா… ஒமைக்ரான் பாதிப்பா?

லண்டனில் இருந்து நேற்று (3.12.2021) அதிகாலை சென்னை வந்த ஒரு குழந்தை உட்பட 2 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச்செய்யப்பட்டு இருக்கிறது.

இறந்து அழுகிய நிலையில், சடலமாக மீட்கப்பட்ட இளம் நடிகர்… திரையுலகினர் அதிர்ச்சி!

36 வயதான பாலிவுட் இளம் நடிகர் பிரம்மா மிஸ்ரா அவருடைய குடியிருப்பில் இறந்து அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்படடு உள்ளார்

உலகின் மிகஉயரிய பதவியில் இந்தியப்பெண்… யார் இந்த கீதா கோபிநாத்?

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதா கோபிநாத் வாஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (ஐபிஎம்) துணை