நாசர் மகனை நெகிழ்ச்சி அடைய செய்த விஜய்

  • IndiaGlitz, [Monday,December 03 2018]

நடிகர் சங்க தலைவர் நாசரின் மகன் பைசல் கடந்த 2014ஆம் ஆண்டு கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்பட்ட சாலை விபத்து ஒன்றில் சிக்கி படுகாயம் அடைந்து மறுபிறவி எடுத்து பிழைத்தார் என்பதும் தளபதி விஜய்யின் தீவிர ரசிகரான ஃபைசலை விஜய் அவ்வப்போது சந்தித்து நலம் விசாரித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஃபைசலின் பிறந்த நாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இந்த பிறந்த நாள் விழாவில் ஃபைசலின் நண்பர்கள் சிறப்பாக நடத்தி கொண்டிருந்தபோது இன்ப அதிர்ச்சியாக தளபதி விஜய் நேரில் வந்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறினார். அதுமட்டுமின்றி பிறந்த நாள் கேக்கை விஜய் கையில் ஏந்த, மெழுகுவர்த்திகளை ஏற்றினார் ஃபைசல். ஒரு மிகப்பெரிய நடிகர் ஒருவர் தனது ரசிகருக்காக கேக்கை கையில் ஏந்திய எளிமை போற்றத்தக்கதாக கருதப்படுகிறது.

இதுகுறித்து ஃபைசலின் தாயார் கமீலா தனது சமூகவலைத்தளத்தில் 'விஜய்யின் தீவிர ரசிகரான தனது மகனின் கனவு நனவாகியதாகவும், இந்த பிறந்த நாளில் தனது மகனுக்கூ வாழ்த்து தெரிவித்த விஜய்க்கு நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

More News

சென்னை திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் தமிழ் படங்கள்

கடந்த 15 ஆண்டுகளாக சென்னையில் சர்வதேச சென்னை திரைப்பட விழா நடைபெற்று வரும் நிலையில் 16வது விழா வரும் 3ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது

போராட்டம் நடத்தி திரும்பி வந்த விவசாயிகளை வரவேற்ற ஒரே அரசியல் தலைவர்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் நேற்று தமிழக விவசாயிகள் உள்பட இந்தியாவின் அனைத்து பகுதியில் உள்ள விவசாயிகளும் போராட்டம் செய்தனர்.

மத்திய அரசை விமர்சிக்க கமலுக்கு தகுதி இருக்கின்றதா? எச்.ராஜா

சமீபத்தில் டெல்டா பகுதியை தாக்கிய கஜா புயலை விட அதனால் ஏற்பட்ட அரசியல் புயலின் தாக்கம் அதிகமாகி உள்ளது. அரசியல்வாதிகள் கடந்த இரண்டு வாரங்களாக கஜா புயலை வைத்து அரசியல் செய்வதோடு,

ரஜினி-ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற கலைஞர்

ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ரஜினியின் அடுத்த படமான 'பேட்ட' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக வெளிவரவுள்ளது.

'மரண மாஸ் தலைவர் குத்து' பாடலை பாடியவர்கள் யார் யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள 'பேட்ட' திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலான 'மரணமாஸ் தலைவர் குத்து' பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.