close
Choose your channels

தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' படப்பிடிப்பு முடிவடைவது எப்போது?

Wednesday, October 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு நிறைவடைவது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி முதல் நடைபெற்று வருகிறது என்பதும் இடையில் சிலமாதங்கள் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் வரும் டிசம்பரில் முடிவடைந்துவிடும் என்று கூறப்படுகிறது. இதுவரை 80 சதவீத படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாகவும் மீதமுள்ள படப்பிடிப்புகள் டிசம்பருக்குள் முடிவடைந்து ஜனவரியிலிருந்து புரமோஷன் பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாக உள்ளதாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.

தளபதி விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துவரும் இந்த படத்தில் செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.