'பீஸ்ட்' படத்தில் தளபதி விஜய்யின் மாஸான கேரக்டர் பெயர்!

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் குறித்த செய்திகள் தினந்தோறும் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது இந்த படத்தில் தளபதி விஜய் கேரக்டர் பெயர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி வார இதழில் இந்த படம் குறித்த பல விபரங்கள் வெளியாகியுள்ள நிலையில் அதில் ஒன்று விஜய்யின் கேரக்டர் பெயர் வீரராகவன் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாஸ் தகவல் தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த படத்தின் டிரைலர் நாளை வெளியாகவிருக்கும் நிலையில் இப்போதே டிரைலர் குறித்த ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ்உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

More News

நடிகர் வில் ஸ்மித் மீது ஒழுங்கு நடவடிக்கை… ஆஸ்கர் விருதுக்கு ஆபத்தா?

94 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட பிரபல அமெரிக்Ĩ

கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை: அஜித்தே எழுதிய நன்றிக்கடிதம்!

அஜித் நடிக்க இருக்கும் 'அஜித் 61' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் நடைபெற உள்ளது என்பதும் இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக சென்னை அண்ணாசாலை செட், ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ்

யானையுடன் 'பீஸ்ட்' ஜாலியோ ஜிம்கானோ பாடலுக்கு நடனமாடிய நடிகை!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே .

ரூ.15 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறியது இந்த போட்டியாளரா?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் போட்டியில் இருந்து ஒருவர் வெளியேற பணப்பெட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டது. ரூபாய் 3 லட்சத்திலிருந்து ஆரம்பித்த

சிம்புவிடம் மன்னிப்பு கேட்ட பிக்பாஸ் அபிராமி: என்ன காரணம்?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சிம்புவிடம் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான அபிராமி மன்னிப்பு கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .