20 அடி உயர சுவர் மீது ஏறி ரசிகர்களுக்கு பிளையிங் கிஸ் கொடுத்த விஜய்.. வீடியோ வைரல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தளபதி விஜய்யை பார்க்க அவரது வீட்டின் முன் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் குவிந்துள்ள நிலையில், அவரது வீட்டின் 20 அடி சுவரின் அந்த பக்கம் ஏறி ரசிகர்களுக்கு கையசைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தளபதி விஜய் தற்போது தனது கடைசி திரைப்படமான ’ஜனநாயகன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம், தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி, அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் போட்டியிட உள்ளார். அவரது கட்சி 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கூடுதல் முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு திடீரென விஜய்யின் வீட்டின் முன் அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் குவிந்தனர். இது குறித்து கேள்விப்பட்ட விஜய், வீட்டில் இருந்தபடியே 20 அடி உயர சுவருக்கு அப்பால் நின்று, ரசிகர்களை நோக்கி கையசை த்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.
இது குறித்த வீடியோவை பகிர்ந்துள்ள ஒரு ரசிகர், “வெற்றி நிச்சயம்” என கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Thalapathy @actorvijay showering flying kisses to his fans outside his home last night. Vettri Nichayam 😍 pic.twitter.com/GLtZCY2eWA
— Vijay Fans Trends (@VijayFansTrends) April 21, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments