close
Choose your channels

'பீஸ்ட்' டப்பிங்கை விஜய் சீக்கிரம் முடித்த ரகசியம் இதுதான்!

Wednesday, December 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின்போது விஜய் மற்றும் நெல்சன் கட்டிப்பிடித்தவாறு எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளங்களில் வைரலானது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் ‘பீஸ்ட்’ படத்தில் விஜய் தனது பகுதிக்கான டப்பிங் பணியை முடித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ‘பீஸ்ட்’ படத்தில் மிகக்குறைந்த வசனங்கள் மட்டுமே இருந்ததால் குறிப்பாக ஒன்லைன் வசனங்கள் மட்டுமே விஜய்க்கு இருந்ததால் அவர் வெகுவிரைவாக ‘பீஸ்ட்’ படத்தின் டப்பிங் பணிகள் முழுவதையும் முடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே நெல்சன் இயக்கிய ’டாக்டர்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கும் இதேபோன்று ஒன்லைன் வசனங்கள் மட்டும் தான் இருக்கும் என்பதும் அதே போன்று அவரது முதல் படமான ’கோலமாவு கோகிலா’ படத்தில் நயன்தாராவுக்கு மிகக்குறைந்த வசனங்களே இருக்கும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் ‘பீஸ்ட்’ படத்திலும் மிகவும் குறைவான அதே நேரத்தில் அழுத்தமான, நகைச்சுவையுடன் கூடிய சிங்கிள் லைன் வசனங்கள் மட்டுமே விஜய்க்கும் உள்ளது என கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘பீஸ்ட்’ படத்தின் சிங்கிள் பாடலின் புரமோ வீடியோ மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படம் ஏப்ரல் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் 2022ஆம் ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.