இனிமேல் ரசிகர்களுக்கு இந்த ஸ்டைல் முத்தம் தான்: மேடையிலேயே முத்தம் கொடுத்த விஜய்!

தளபதி விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்த நிலையில் இந்த விழாவில் ஏராளமான ரசிகர்கள் கூடி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் பேச ஆரம்பித்தவுடன் ரசிகர்களின் கரகோஷம் விண்ணை பிளந்த நிலையில் ரசிகர்களுக்கு அவர் பிளையிங் கிஸ் கொடுத்து தனது பேச்சை தொடங்கினார்

இனிமேல் ரசிகர்களுக்கு இந்த பிளையிங் முத்தம்தான் கொடுக்க உள்ளேன் என்று அவர் கூறிய மேடையில் இருந்தபடி நாலாபக்கமும் பிளையிங் கிஸ் கொடுத்தார். அவரிடமிருந்து இனி அடுத்தடுத்த படங்களின் ஆடியோ விழாவில் இந்த பிளையிங் முத்தத்தை எதிர்பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த விழாவில் தனது ரசிகர்கள் ரத்ததானம் செய்வது குறித்து குறிப்பிட்ட விஜய், நான் வெறும் ஐடியா தான் கொடுத்தேன், ஆனால் அதை செயல்படுத்தியது ரசிகர்கள் தான் என்றும் அதனால் அவர்களுக்கு இந்த பெருமை சேரும் என்று கூறினார் .

மேலும் ரத்தத்திற்கு மட்டும்தான் ஜாதி மதம், ஏழை பணக்காரன் என்ற எந்த பாகுபாடும் இருக்காது என்றும் எனவே இரத்தத்தில் இருந்து நாம் அட்லீஸ்ட் இந்த ஒரு நல்ல குணத்தையாவது கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அவரது இந்த பேச்சுக்கு ஏராளமான பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
 

More News

'வாரிசு' இசை வெளியீட்டு விழா: தனது போட்டியாளர் யார் என பகிரங்கமாக அறிவித்த விஜய்!

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. 

கேர்ள் ப்ரண்ட் உடன் விஜய் பார்த்த திரைப்படம்

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்த நிலையில் சுமார் அரை மணி நேரம் விஜய் பேசிய கலகலப்பான பேச்சு ரசிகர்கள் மத்தியில் பெரும் திருப்தியை ஏற்படுத்தியது. 

'வாரிசு' இசை வெளியீட்டு விழா: விஜய் கூறிய குட்டிக்கதை!

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடந்த நிலையில் இதில் விஜய் வழக்கம்போல் குட்டிக்கதை கூறினார்

விஜய்சேதுபதி-காத்ரீனா கைப் படத்தின் புதிய அப்டேட்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் பிரபல பாலிவுட் நடிகை காத்ரீனா கைப் ஆகிய இருவரும் இணைந்து நடித்து வரும் திரைப்படம் 'மெர்ரி கிறிஸ்மஸ்'. இந்த படத்தை ஸ்ரீராம் என்பவர் இயக்கி வருகிறார்

கடலில் டைவ் அடித்து சான்றிதழ் வாங்கிய தமிழ் நடிகை.. வைரல் புகைப்படங்கள்!

கடலில் டைவ் அடித்து சான்றிதழ் வாங்கிய தமிழ் நடிகை ஒருவரின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.