யோகிபாபுவுக்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்: வைரல் புகைப்படம்

  • IndiaGlitz, [Saturday,December 10 2022]

தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்த சில படங்கள் சூப்பர் ஹிட் ஆகியது என்பது தெரிந்ததே. குறிப்பாக யோகி பாபு ஹீரோவாக நடித்த ’மண்டேலா’ என்ற திரைப்படம் தேசிய விருதை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திரையுலகில் பிஸியாக இருக்கும் யோகி பாபு அவ்வப்போது தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் விளையாட்டை விளையாடுவார் என்பதும், அவர் கிரிக்கெட் விளையாடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் யோகி பாபுவின் கிரிக்கெட் திறமையை பார்த்து அவருக்கு கிரிக்கெட் பேட் ஒன்றை தளபதி விஜய் பரிசாக கொடுத்துள்ளார். விஜய் கொடுத்த பேட் உடன் கூடிய புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள யோகிபாபு, ‘இந்த பேட்டை எனக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் ஆக கொடுத்த விஜய் அண்ணாவுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். பேட் மற்றும் ஹெல்மெட் உடன் இருக்கும் யோகி பாபுவின் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

விஜய்யுடன் நடிகர் யோகிபாபு பீஸ்ட், பிகில், மெர்சல், சர்கார் உள்பட பல படங்களில் நடித்துள்ள நிலையில் விஜய்யின் அடுத்த படத்திலும் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

More News

'குக் வித் கோமாளி' ரித்திகாவின் ஹனிமூன் புகைப்படம்.. எங்கே சென்றார் தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று 'குக் வித் கோமாளி' என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ரித்திகாவுக்கு கடந்த சில நாட்களுக்கு

இந்த வார டபுள் எவிக்சன்.. வெளியேறிய இரண்டு போட்டியாளர்கள் இவர்கள் தான்!

 பிக்பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களுக்கு மேல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு வாரமும் குறைந்த வாக்குகள் பெற்ற நாமினேஷன் பட்டியலில் உள்ள ஒருவர் வெளியேற்றப்படுகிறார் என்பதை

விஷாலின் 'லத்தி' படத்தின் சூப்பர் அப்டேட்: ரசிகர்கள் உற்சாகம்

 விஷால் நடித்த 'லத்தி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

எஸ்.எஸ்.ராஜமெளலி படத்தில் இணையவிரும்பும் சர்வதேச நிறுவனங்கள்!

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி  இயக்கிய பாகுபலி, பாகுபலி 2, மற்றும் 'ஆர்.ஆர்.ஆர்' ஆகிய திரைப்படங்கள் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றன என்பதும் இந்த மூன்று படங்களுமே

'காபி வித் காதல்' உள்பட இன்று வெளியாகியுள்ள ஓடிடி ரிலீஸ் படங்கள்!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் நான்கு முதல் ஆறு திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் அதே அளவு கிட்டத்தட்ட ஓடிடி வடிவிலும் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.