எதிர்பார்த்த அதே டைட்டில் தான்: 'தளபதி 68' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்..!

  • IndiaGlitz, [Sunday,December 31 2023]

தளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 68’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே இந்த படத்தின் டைட்டில் ’G.O.A.T’ என்று கசிந்த நிலையில் அதே டைட்டில் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த டைட்டில் போஸ்டரில் இரண்டு வித்தியாசமான விஜய்யின் கெட்டப்பும் உள்ளது என்பதும் குறிப்பாக அதில் ஒன்று விஜய்யின் இளமை காலகட்ட கிராபிக்ஸ் கெட்டப், விஜய்யை 20 வருடங்களுக்கு முன் பார்த்தது போல் உள்ளது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மொத்தத்தில் இந்த டைட்டில் உடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். விஜய், பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

அய்யா யார்? ஜெய் நீதிபதி ஆனாரா? 'லேபிள்' வெப்தொடரின் கடைசி எபிசோடு..!

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவான 'லேபிள்' என்ற வெப் தொடர் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கிய நிலையில் 10வது கடைசி எபிசோடு இந்த வாரம் வெளியாகியுள்ள

நிக்சன் எவிக்சனால் ஐஷு தந்தைக்கு என்ன ஒரு சந்தோஷம்.. இன்ஸ்டா பதிவு வைரல்..!

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து நிக்சன் மற்றும் ரவீனா வெளியேறப்போவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நிக்சன் வெளியேற்றம் குறித்து ஐஷு தந்தை தனது சமூக வலைத்தளத்தில்

2 மாநிலங்களில் மட்டும் 'அயலான்', 'கேப்டன் மில்லர்' ரிலீஸ் இல்லையா? என்ன காரணம்?

சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' மற்றும் தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்

91 நாட்கள் கழித்து எவிக்சன் என்றால் என்ன காரணம்? மனசாட்சியுடன் பேசும் கமல்ஹாசன்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 91 நாள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் இரண்டே வாரத்தில் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்து விடும். இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில்  10 போட்டியாளர்கள்

பெண் பத்திரிகையாளர் தோளில் கை வைத்த விவகாரம்: முன்ஜாமீன் கேட்டு பிரபல நடிகர் மனு தாக்கல்..!

பெண் பத்திரிகையாளர் தோளில் கை வைத்த விவகாரத்தில் தன்னை கைது செய்யாமல் இருக்க பிரபல நடிகர் ஒருவர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.