close
Choose your channels

உறுதி செய்யப்பட்ட 'தளபதி 69'.. அட்வான்ஸ் பணம்.. விஜய் சம்பளம் இத்தனை கோடியா?

Monday, June 24, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’கோட்’ திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இன்னும் அவர் ஒரே ஒரு படம் நடிப்பார் என்றும் ’தளபதி 69’ என்ற அந்த படம் தான் அவரது கடைசி படம் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் ’தளபதி 69’ திரைப்படம் உருவாகுவது சந்தேகம் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த படம் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை விஜய் தொடங்கிய நிலையில் ’தளபதி 69’ படத்தை முடித்தவுடன் முழு நேர அரசியலுக்கு வர இருப்பதாகவும் அதன் பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும் விஜய் அறிவித்திருந்தார்.

ஆனால் அதே நேரத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே இருப்பதால் இன்னொரு படம் நடித்து அதில் ஒரு ஆண்டு செலவு செய்ய விஜய் விரும்பவில்லை என்றும் அதனால் ’தளபதி 69’ படம் டிராப்பாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்களின்படி ’தளபதி 69’ திரைப்படம் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் விஜய்க்கு 270 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாகவும், தென்னிந்திய திரையுலகில் மிக அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் உயர்ந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ‘தளபதி 69’ படத்தில் பணிபுரியும் சில டெக்னீசியன்களுக்கு குறிப்பாக கிராபிக்ஸ் கலைஞர்களுக்கு அட்வான்ஸ் பணம் வழங்கப்பட்டதாகவும் மொத்தத்தில் இந்த படம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

’தளபதி 69’ திரைப்படத்தை எச் வினோத் இயக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தற்போது திரைக்கதை அமைக்கும் பணியை முடித்துவிட்டு அடுத்த கட்டமாக நட்சத்திரங்களை தேர்வு செய்யும் பணியில் இருப்பதாகவும் விரைவில் இந்த படத்தில் நடிக்கும் ஹீரோயின் உள்பட நடிகர், நடிகைகளின் தகவல்கள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment