close
Choose your channels

நாளை 'பீஸ்ட்' ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம விருந்து!

Saturday, December 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் படத்தின் புரமோ பாடலின் படப்பிடிப்பு நேற்று நடைபெற்றதாகவும் இந்த படப்பிடிப்பில் விஜய், நெல்சன், அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டனர் என்பதையும் பார்த்தோம்.

மேலும் இது குறித்த புகைப்படங்களும் நேற்று இணையதளங்களில் வைரலாகியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புரமோ பாடல் வரும் புத்தாண்டு தினத்தில் சரியாக நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நாளை ‘பீஸ்ட்’ படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை மாலை 5 மணிக்கு சன் பிக்சர்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் குறித்த தகவலுடன் கூடிய ஸ்பெஷல் போஸ்டர் வெளியாக உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த செய்தி உறுதி செய்யப்பட்டால் நாளை ‘பீஸ்ட்’ ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.