தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' 3 நாள் வசூல்: 'கேஜிஎஃப் 2' ரிலீஸால் பாதிப்பா?


Send us your feedback to audioarticles@vaarta.com


தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியான நிலையில் 13, 14 , 15 ஆகிய மூன்று நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. மேலும் ’கேஜிஎப் 2’ திரைப்படம் ரிலீஸ் ஆனதால் ‘பீஸ்ட்’ படத்தின் வசூல் பாதிப்பா? என்ற தகவல் தற்போது பார்ப்போம்.
தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் முதல் நாளில் 65 கோடி ரூபாய் வசூல் ஆனதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி ’கேஜிஎப் 2’ திரைப்படம் வெளியானதால் அன்றைய தினம் ‘பீஸ்ட்’ வசூல் பாதியாக குறைந்தது. அதாவது 2வது நாளில் ரூ.35 கோடியும் 3வது நாளில் ரூ.32 கோடியும் என மொத்தம் மூன்று நாட்களில் ரூ.127 கோடியும் வசூலானதாக தகவல் வெளியாகியுள்ளது. 2வது மற்றும் 3வது நாள் பீஸ்ட் படத்தி வசூல் குறைவானதற்கு ’கேஜிஎப் 2’ திரைப்படம் ரிலீஸ் ஆனதே காரணம் என்று டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன.
இருப்பினும் சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் 50 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்றும் விரைவில் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் வசூல் 200 கோடி ரூபாயை தொட்டுவிடும் என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments