close
Choose your channels

தளபதி விஜய்யின் 'பீஸ்ட்': டெல்லி படப்பிடிப்பு குறித்த மாஸ் தகவல்!

Monday, September 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘பீஸ்ட் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற்றது என்பதும், அதன் பின்னர் மூன்று கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் அடுத்தடுத்து நடைபெற்றது என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் இன்று முதல் டெல்லியில் ‘பீஸ்ட்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ல விஜய் உள்பட படக்குழுவினர் டெல்லி செல்லும் விமானத்தின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்ற்ன. இந்த படப்பிடிப்பு ஒரு வாரம் மட்டும் நடைபெறும் என்றும் இந்த படப்பிடிப்பில் ஒரு அதிரடி மாஸ் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ் இந்த சண்டை காட்சியை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

டெல்லியில் நடைபெறும் ஒரு வாரம் படப்பிடிப்பு முடிந்த பின்னர் பீஸ்ட் படக்குழுவினர் ரஷ்யா செல்ல இருப்பதாகவும், அங்கு ஒரு சில ஆக்ஷன் காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

‘பீஸ்ட்’ படத்தின் மொத்த படப்பிடிப்பும் நவம்பர் மாதத்திற்குள் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்றும், இந்த படத்தை வரும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்ய இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தளபதி விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துவரும் இந்த படத்தில் செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.