தளபதி விஜய்யின் 'கோட்' சிங்கிள் பாடல் தயார்.. ரிலீஸ் எப்போது?

  • IndiaGlitz, [Saturday,January 20 2024]

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், உருவாகி வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாக தயாராகி விட்டதாகவும் விரைவில் பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடந்த நிலையில் அடுத்த கட்டமாக இலங்கையில் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பில் விஜய் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மூன்று பாடல்களை கம்போஸ் செய்து முடித்து விட்டதாகவும் அதில் ஒரு பாடல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாக இருப்பதாகவும் அது குறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பை மார்ச் மாதத்தில் படித்துவிட்டு அதன் பிறகு போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மற்றும் புரோமோஷன் பணிகள் நடைபெறும் என்றும் ஜூன் மாதம் விஜய்யின் பிறந்த நாளன்று இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

More News

தெலுங்கிலும் பட்டைய கிளப்பும் எஸ்.ஜே.சூர்யா.. பிரபல நடிகர் படத்தில் இணைந்ததாக அறிவிப்பு..!

தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத நடிகராகிவிட்ட எஸ்ஜே சூர்யா தற்போது தெலுங்கு திரையுலகிலும் பட்டையை கிளப்பி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில்,

சானியா மிர்சாவின் முன்னாள் கணவர் மறுமணம்.. மணப்பெண் ஒரு பிரபல நடிகையா?

இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் முன்னாள் கணவர் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் பிரபல நடிகையை திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

சந்திக்க விரும்பிய ஆக்சன்கிங் அர்ஜூன்.. உடனே அப்பாயின்மெண்ட் கொடுத்த மோடி.. என்ன நடந்தது?

தமிழகம் வந்திருக்கும் பிரதமர் மோடியை சந்திக்க ஆக்சன் கிங் அர்ஜுன் அப்பாயின்மென்ட் கேட்ட நிலையில் உடனடியாக அவருக்கு அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்ததாகவும் இதனையடுத்து

புதிய திரைப்படங்கள் வெளியாகாத வெள்ளிக்கிழமை.. என்ன காரணம்?

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குறைந்தது இரண்டு திரைப்படங்கள், அதிகப்படியாக ஐந்து திரைப்படங்கள் வரை  ரிலீஸ் ஆகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். பொங்கல் விருந்தாக நான்கு

உங்கள் மாணவி என்பதில் எனக்கு பெருமை.. பிக்பாஸ் கோப்பையுடன் ஆசிரியரை சந்தித்த பிக்பாஸ் அர்ச்சனா..!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான அர்ச்சனா வெற்றி பிக் பாஸ் கோப்பையுடன் தனது ஆசிரியரை சந்தித்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.