close
Choose your channels

'லியோ'  FDFS காட்சியின் டிக்கெட் வெளியீட்டு விழா.. கலந்து கொண்ட பிரபல நடிகர்..!

Tuesday, August 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பே இந்த படத்தின் ரசிகர்களுக்கான முதல் நாள் முதல் காட்சியின் டிக்கெட் வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் பிரபல நடிகர் ஒருவர் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’லியோ’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில் நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாகவும் திட்டமிட்டபடி அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் செய்ய பட குழுவினர் தீவிரமாக பணி செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இந்த படம் தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும், உலகம் முழுவதும் அக்டோபர் 19ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாக உள்ள நிலையில் தமிழகத்திற்கு இணையாக விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருக்கும் கேரள மாநிலத்தில் ரசிகர்களுக்கான முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி கலந்து கொண்டு ரசிகர்களுக்கு டிக்கெட்டை வெளியிட்டார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.