'லியோ' ரன்னிங் டைம் இவ்வளவு தானா? 'மாஸ்டர்' 'விக்ரம்' படங்களை விட குறைவுதான்..!

  • IndiaGlitz, [Friday,September 22 2023]

தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் சமீபத்தில் தொடங்கிவிட்டன என்பதும் வரிசையாக நான்கு போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகின என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியீடு மற்றும் ஆடியோ வெளியீடு குறித்த தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அது மட்டுமின்றி வெளி மாநிலத்தில் இந்த படத்தை புரமோஷன் செய்ய, குறிப்பாக தெலுங்கு இந்தியில் அதிக அளவு புரமோஷன் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி ’லியோ’ படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 39 நிமிடங்கள் என்று கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜின் முந்தைய திரைப்படமான ’விக்ரம்’ படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 54 நிமிடங்கள் ’மாஸ்டர்’ படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 59 நிமிடங்களில் இருந்தது. மேற்கண்ட இரண்டு படங்களை விட ’லியோ’ திரைப்படத்தின் ரன்னிங் டைம் குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

'தலைவர் 170' படப்பிடிப்பு எங்கே? எப்போது? ரஜினி பேசப்போகும் புதிய ஸ்லாங்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'தலைவர் 170' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி குறித்த தகவல் கசிந்து உள்ளது .

'மார்க் ஆண்டனி' தயாரிப்பாளரின் அடுத்த படம்.. இயக்குனர் இந்த பிரபலமா?

விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா நடித்த 'மார்க் ஆண்டனி' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 50 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது

எஸ்.ஜே.சூர்யா கேரக்டரில் பாலிவுட் பிரபலம் நடிக்க இருந்தாரா? 'மார்க் ஆண்டனி' குறித்த ஆச்சரிய தகவல்

விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான  'மார்க் ஆண்டனி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியது என்பது தெரிந்ததே.

நயன்தாராவின் 'ஏ' சர்டிபிகேட் திரைப்படம்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா ஆகியோர் நடித்த 'இறைவன்' திரைப்படம் வரும் 28ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின்  சென்சார் சான்றிதழ் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள் வெளியாகி உள்ளன.

என் மகள் என்னிடம் பேசி கொண்டு தான் இருக்கிறாள்.. விஜய் ஆண்டனியின் உருக்கமான பதிவு..!

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா நேற்று முன்தினம் திடீரென தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரை உலகையே அதிர்ச்சி அடையச் செய்தது.