மூன்றே நாட்களில் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த 'மாஸ்டர்': மொத்த வசூல் எவ்வளவு?

  • IndiaGlitz, [Saturday,January 16 2021]

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த 13ஆம் தேதி வெளியாகி மூன்று நாட்களும் படம் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக திரையிடப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த படத்திற்கு பெரும்பாலான விமர்சகர்கள், மற்றும் ஊடகங்கள் பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்து உள்ளனர் என்பதும் இந்த விமர்சனங்களை பார்த்து தற்போது பொங்கல் விடுமுறை என்பதால் குடும்பம் குடும்பமாக இந்த படத்தை பார்க்க திரையரங்குகளில் குவிந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ‘மாஸ்டர்’ படத்தின் 3 நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. மூன்றே நாட்களில் இந்த படம் உலகம் முழுவதும் 102 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழகத்தில் மட்டும் 52 கோடி வசூல் செய்துள்ளதாகவும், கேரளாவில் ரூ.5 கோடி, கர்நாடகாவில் ரூ.10 கோடி, ஆந்திராவில் ரூ.14 கோடி, வட இந்தியாவில் ரூ.3 கோடி மற்றும் வெளிநாடுகளில் இந்த படம் ரூ.18 கோடி வசூல் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் வழக்கம்போல் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் இந்த வசூல் விவரங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.1 லட்சம் நிதி உதவியா? வியக்க வைக்கும் புதிய அறிவிப்பு!!!

உலகிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்காதான்.

இனிமேல் இதுபோன்று செய்ய மாட்டேன்: பிறந்த நாளில் வருத்தம் தெரிவித்த விஜய்சேதுபதி

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் பட்டாக்கத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

ஆரி தான் டைட்டில் வின்னர்: எத்தனை லட்சம் வாக்குகள் லீடிங் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய ஒரு சில வாரங்களிலேயே ஆரிதான் டைட்டில் வின்னர் என்பது கிட்டத்தட்ட உறுதியானது. அதன் பின்னர் நாட்கள் செல்ல செல்ல அவருக்கு இருக்கும்

இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்துவிட்ட கொரோனா தடுப்பூசி! முன்னுரிமை யாருக்கு?

இந்தியாவில் அவசர கால அடிப்படையில் இன்றுமுதல் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டு வருகிறது.

'மாஸ்டர்' பார்க்க வந்த ஏழைப்பெண்ணுக்கு திரையரங்கு ஊழியர் தந்த இன்ப அதிர்ச்சி: வைரல் வீடியோ

தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' படம் பார்க்க வந்த வயதான ஏழை பெண் ஒருவருக்கு திரையரங்கு ஊழியர் கொடுத்த இன்ப அதிர்ச்சி வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது