close
Choose your channels

'பாகுபலி 2' சாதனையை முறியடித்த தளபதி விஜய்யின் 'மாஸ்டர்'

Sunday, February 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபாஸ் நடிப்பில் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய ’பாகுபலி 2’ படத்தின் மிகப்பெரிய சாதனையை தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படம் முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

எஸ்.எஸ். ராஜமவுலியின் பாகுபலி 2’ திரைப்படம் தான் தமிழகத்தில் திரையரங்குகளில் மிக அதிக வசூலை பெற்றுத் தந்த திரைப்படம் என்ற சாதனை கடந்த மூன்று ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்தது. ரஜினி அஜித் படங்கள் கூட இந்த சாதனையை முறியடிக்க முடியாத நிலையில் தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படம் இந்த சாதனையை தற்போது முறியடித்துள்ளது

தமிழகத்தில் திரையரங்குகளில் அதிகம் வசூல் மற்றும் தயாரிப்பாளருக்கு ஷேர் கிடைத்த படம் ’மாஸ்டர்’ படம் தான் என்ற தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா ஊரடங்கு நேரத்தில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற நிபந்தனையுடன் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் ’பாகுபலி 2’ வசூல் சாதனையை முறியடித்துள்ளது என்பது ஆச்சரியமிக்க ஒரு விஷயம் ஆகும்

தமிழகத்தை பொருத்தவரை திரையரங்குகளில் அதிக வசூல் ஆன முதல் ஐந்து படங்கள் என மாஸ்டர், பாகுபலி 2, பிகில், சர்க்கார் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்கள் உள்ளன என்பதும் இந்த பட்டியலில் மூன்று படங்கள் விஜய் படங்கள் என்பதும் விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான ஒரு செய்தி என்பது குறிப்பிடதக்கது.

தளபதி விஜய்யின் மாஸ்டர் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள வெற்றி பெற்றுள்ளதோடு பாகுபலி 2 படத்தின் சாதனையை முறியடித்த தகவலை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.