விஜய்யின் 'மாஸ்டர்' திரைப்படம் வெளியாகும் தேதி குறித்த தகவல்!
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடியில் வெளிவர வாய்ப்பு இல்லை என்றும் திரையரங்குகளில் தான் வெளிவரும் என்றும் பட தயாரிப்பாளர் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார் என்பது தெரிந்ததே. இதனை அடுத்து ‘மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக கருதப்படுகிறது
இந்த நிலையில் ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று கோலிவுட் திரையுலகில் இருந்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி ‘மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
ஜனவரி 13 என்பது புதன்கிழமை என்பதும் அதன் பின்னர் 14, 15, 16, 17 ஆகிய 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் படக்குழுவினர்களிடம் இருந்து வரும் வரை காத்திருப்போம்
விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படம் அனிருத் இசையில், சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.