விஜய் அரசியல் கட்சியின் முக்கிய அறிவிப்பு.. ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தலாம்..!

  • IndiaGlitz, [Saturday,May 11 2024]

தளபதி விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் இந்த கட்சியின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் இந்த அறிவிப்பு குறித்து யாருக்காவது ஆட்சேபனை இருந்தால் அதனை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த சில மாதங்களுக்கு நுன் ஆரம்பித்தார் என்பதும் இந்த கட்சியின் ஒரு சில அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியானது என்பது தெரிந்தது. இந்த நிலையில் இந்த கட்சியின் நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நிர்வாகிகள் விஷயத்தில் ஆட்சேபனை இருப்பவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்தலாம் என பத்திரிகையில் பொது விளம்பரம் வெளியாகி உள்ளது.

இந்த விளம்பரத்தில் ’தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய், கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன், தலைமை கழக செயலாளர் ராஜசேகரன், இணை கொள்கை பரப்பு செயலாளர் தகிரா என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் பெயரை பதிவு செய்வதில் ஆட்சேபனை இருப்பவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தெரியப்படுத்தலாம் என பத்திரிகைகள் பொது விளம்பரம் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2026 ஆம் ஆண்டு நடைபெறும் பொது தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் என்று விஜய் அறிவித்துள்ள நிலையில் அடுத்தடுத்த அரசியல் கட்சியின் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

எம்.ஆர்.ராதாவை சினிமாவில் நடிக்கக்கூடாது என கட்டளை இட்ட என்.எஸ்.கே - ராதாரவி

நடிகர் ராதாரவி அவர்கள் INDIAGLITZ-க்கு அளித்த பேட்டியில், எனது தந்தை எம். ஆர். ராதா மற்றும் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் நாடகத்திலிருந்து வந்தவர்கள்.

'சூர்யா 44' படத்தில் இணையும் 'தக்லைஃப்' பிரபலம்..! பான் - இந்திய படமா?

சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'சூர்யா 44' படத்தின் படப்பிடிப்பு அனேகமாக அடுத்த மாதம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும்

மாதம்பட்டி ரங்கராஜ்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகை சுஜித்ரா

ரங்கராஜ் அவர்கள்,சுஜித்ரா அவர்கள் எங்களோட நம்பிக்கையின் நட்சத்திரம்.அவங்க அவங்களோட பெஸ்ட்ட நல்லாவே கொடுக்குறாங்க.கூடிய சீக்கிரமே லைவ்வா ஒரு கிராண்ட் டின்னர் பண்ணி கொடுக்குறேன்...

தேசிய விருது பெற்ற படத்தின் இரண்டாம் பாகம்.. ஹீரோவாக மாறிய தயாரிப்பாளர்..!

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி தேசிய விருது பெற்ற படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கும் நிலையில் முதல் பாகத்தை தயாரித்த தயாரிப்பாளரே இரண்டாம் பாகத்தின்

தேர்தலில் வெற்றி யாருக்கு? ஐபிஎல் வின்னர் யார்? ஜோசியராக மாறிய 'கோலங்கள்' நடிகரின் கணிப்பு..!

திருச்செல்வன் இயக்கத்தில் உருவான 'கோலங்கள்' என்ற சீரியலில் நடித்த நடிகர் தற்போது ஜோதிடராக மாறியுள்ள நிலையில், நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள்?