தளபதி விஜய்யின் 'பீஸ்ட்': சூப்பர் அப்டேட்டை அறிவித்த சன்பிக்சர்ஸ்!

தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த திரைப்படம் ‘பீஸ்ட்’ . இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று ஏழு மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்த நிலையில் சற்று முன்னர் அந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த அறிவிப்பில் தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பீஸ்ட் செகண்ட் சிங்கிள் பாடல் வரும் 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புரமோ வீடியோவில் விஜய், அனிருத் மற்றும் நெல்சன் டான்ஸ் ஆடும் காட்சிகள் உள்ளதை அடுத்து இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே ‘பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற முதல் பாடலான அரபிக்குத்து பாடல் இன்னும் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் தற்போது இந்த பாடலும் அதனுடன் இணைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

மக்கள் எல்லாரும் அவனை கூகுள்ன்னு கூப்பிடுவாங்க: 'சந்தானம்' அடுத்த பட மோஷன் போஸ்டர்

'மேயாத மான்' மற்றும் 'ஆடை' படங்களை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகும் அடுத்த திரைப்படத்தில் சந்தானம் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர்

சிங்கமா-சிறுத்தையா? புலியா-நரியா?: விஷ்ணுவிஷாலின் 'மோகன்தாஸ்' டீசர்!

விஷ்ணு விஷால் நடித்த 'எப்.ஐ.ஆர்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படமான 'மோகன்தாஸ்' படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி உள்ளது 

'அஜித் 61' படப்பிடிப்பு தொடங்கும் முன் 'அஜித் 62' அறிவிப்பு?

அஜித் நடித்த 60வது திரைப்படமான 'வலிமை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி 200 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் நடிக்கயிருக்கும் 61வது திரைப்படத்தின்

விளையாடிக் கொண்டிருந்தபோதே சரமாரியாகச் சுடப்பட்ட இந்திய வீரர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இந்தியா சார்பாக சர்வதேச அளவில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிகளைக் குவிந்துவந்த கபடி வீரர் சந்தீப் நங்கல்

ஆடியோ லாஞ்ச் இல்லை, ஆனால் அதற்கு பதிலாக செம விருந்து: 'பீஸ்ட்' லேட்டஸ்ட் அப்டேட்

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பீஸ்ட்'  படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன