விஜய்யின் 'தளபதி 66' படத்தை இயக்குவது தேசிங்கு பெரியசாமியா? வம்சியா?

  • IndiaGlitz, [Thursday,August 19 2021]

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 66’ திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க இருப்பதாகவும், பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தது. ஆனால் இந்த செய்தியில் திடீரென மாற்றம் ஏற்பட்டு, வம்சி இயக்கத்தில் தில் ராஜ் தயாரிப்பில் நடிப்பதற்கு விஜய் இன்னும் முழுமையாக ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் திடீரென ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனர் தேசிங்கு பெரியசாமி விஜய்க்கு ஒரு கதை சொல்லி இருப்பதாகவும், அவர் தான் விஜய் 66 வது படத்தை இயக்கப் போவதாகவும் ஒருசில ஊடகங்களில் தகவல்கள் வந்தன.

இந்த நிலையில் தற்போது நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வெளி வந்த தகவலின்படி தளபதி விஜய்யின் 66வது படத்தை இயக்கப்போவது வம்சி தான் என்றும் இந்த படத்தை தயாரிக்க இருப்பது தில் ராஜூ தான் என்பதும் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த படத்தின் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் தென்னிந்திய நடிகர்கள் யாரும் வாங்காத சம்பளத்தை விஜய் வாங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

விஜய்யின் 67வது திரைப்படத்தை தான் தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாகவும் அதற்குள் அவர் ரஜினியின் திரைப்படத்தை இயக்கி முடித்து விட்டு வந்து விடுவார் என்றும் கூறப்படுகிறது. எனவே ’தளபதி 66’ படத்தை இயக்குவது வம்சி தான் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

லட்சங்கள்ல படம் தயாரிச்சா மதிக்க மாட்டங்க: 'ஆயிரத்தில் ஒருவன்' பட்ஜெட் டுவிட்டுக்கு இயக்குனரின் கமெண்ட்!

பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கிய 'ஆயிரத்தில் ஒருவன்' என்ற திரைப்படத்தின் பட்ஜெட் குறித்து இன்று காலை செல்வராகவன் டுவிட் ஒன்றை பதிவு செய்தார் என்பதும் ரூ.18 கோடியில் மட்டுமே தயாரான

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தீபிகாவா இவர்? வைரலாகும் பள்ளிப்பருவ புகைப்படம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மனங்கவர்ந்த சீரியலாக இருக்கும் நிலையில் அவற்றில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களின் ஸ்பெஷல் என்று கூறலாம்.

புகழை அடுத்து கார் வாங்கிய விஜய் டிவி பிரபலம்: மனைவி பரிசளித்ததாம்!

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த புகழ் சமீபத்தில் கார் வாங்கினார் என்பதும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது என்பதும் தெரிந்ததே.

அஸ்வின் கதாநாயகன், ஷிவாங்கி பாடகி....! வெளிவரவிருக்கும் புதிய பாடல்.....!

"குக் வித் குமாளி" யின் மூலம் பிரபலமானவர் தான் நடிகர் அஸ்வின் மற்றும் பாடகி ஷிவாங்கி. இந்த நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம்பிடித்த,

பாடகர் தம்பதியின் மகன் நடித்துள்ள ஆல்பம் பாடல்....! ஜோடி சேர்ந்த முன்னணி சீரியல் நடிகை....!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி -2 சீரியல் மூலம் நாயகியாக நடித்து பிரபலமானவர் தான், நடிகை ப்ரீத்தி ஷர்மா