close
Choose your channels

தளபதி விஜய் சுட்ட தோசை: த்ரோபேக் வீடியோ வைரல்

Wednesday, June 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் உள்பட மாஸ் நடிகர்களின் பழைய வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகும் என்பதும் குறிப்பாக இந்த ஊரடங்கு நேரத்தில் அதிகளவில் சமூக வலைத்தளங்களில் அரிய வீடியோக்கள் வைரலாகி வருகிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் தளபதி விஜய் தோசை சுட்ட வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது

தளபதி விஜய் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது பேட்டியாளர் முன் தோசை சுட்டு காண்பித்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. மிக நேர்த்தியாக அவர் சுட்ட தோசை அந்த வீடியோவில் உள்ளது

மேலும் தான் ரெகுலராக உடற்பயிற்சி செய்வதாகவும் உடற்பயிற்சிகள் செய்வதற்கு என தனது வீட்டில் சில உபகரணங்கள் வைத்திருப்பதாகவும் ஒரு கலைஞனுக்கு உடற்பயிற்சி என்பது மிகவும் அவசியம் என்றும் அவர் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் ரசித்து தங்கள் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.