தவெக தலைவர் விஜய்யின் ரோட் ஷோ எப்போது? ஸ்தம்பிக்க போகும் 3 நகரங்கள்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழகத்தில் உள்ள மூன்று நகரங்களில் ரோட் ஷோ (Road Show) நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அந்த மூன்று நகரங்களும் ஸ்தம்பிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுவது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், 'ஜனநாயகன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் முழு நேர அரசியலில் இறங்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், சமீபத்தில் 'ஜனநாயகன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாகவும், அதற்கு முன்பு இந்த மூன்று நகரங்களில் ரோட் ஷோ நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
முதல் கட்ட ரோட் ஷோ, காவிரி டெல்டா பகுதிகளில் நடத்தப்பட இருப்பதாகவும், ஆகஸ்ட் மாதம் இந்த ரோட் ஷோ நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னர், கோவை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய இரண்டு நகரங்களிலும் அடுத்தடுத்த ரோட் ஷோக்கள் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.
தளபதி விஜய் முழுமையான அரசியல் களத்தில் இறங்காமலேயே கட்சிக்கு ஒரு கோடிக்கும் மேல் உறுப்பினர்கள் சேர்ந்த நிலையில், இந்த ரோட் ஷோவுக்குப் பின்னர் அது 2 கோடியாக உயரும் என்று கூறப்படுகிறது. வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக அரசியல் களத்தில் விஜய் ஒரு முக்கிய திருப்புமுனையாக இருப்பார் என்று அரசியல் வல்லுநர்கள் கணித்து வரும் நிலையில், அவரது இந்த ரோட் ஷோ எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com