படப்பிடிப்பு முடிவதற்குள் வியாபாரத்தை முடித்த 'வாரிசு' படக்குழு: இதுவரை எத்தனை கோடி தெரியுமா?

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் வம்சி இயக்கத்தில், தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில், இசையமைப்பாளர் தமன் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’ . விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் இந்த படத்தில் ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்துள்ளது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை, ஐதராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு முடிய இன்னும் ஒன்று அல்லது இரண்டு மாதம் ஆகும் என்று கூறப்படும் நிலையில் இந்த படத்தின் வியாபாரம் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை சன்டிவி 50 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி உள்ளதாகவும், டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் 60 கோடி கொடுத்து வாங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் இந்த படத்தின் ஆடியோ உரிமை 10 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தெரிகிறது.

மேலும் ‘வாரிசு’ திரைப் படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமை 32 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஹிந்தி டப்பிங் உரிமை 32 கோடி வியாபாரம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே படப்பிடிப்பு முடியும் முன்பே இப்படத்தின் வியாபாரம் கிட்டத்தட்ட 160 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகி விட்டதாக கூறப்படுகிறது. இன்னும் தமிழக ரிலீஸ் உரிமை வியாபாரம் நடைபெற வேண்டிய நிலையில் மொத்தம் 250 கோடிக்கும் அதிகமாக இந்த படத்தின் வியாபாரம் இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

More News

'விக்ரம்' படத்தில் அந்த முக்கிய காட்சியை எடுக்க மறந்துவிட்டோம்.. நடிகை காயத்ரி

'விக்ரம்' படத்தில் ஒரு முக்கிய காட்சியை எடுக்க மறந்து விட்டோம் என அந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த காயத்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

செஞ்சிடாதிங்கடா இந்த போட்டோவை... தனி விமானத்தில் மனைவியுடன் சென்ற ரவீந்தர்!

தனி விமானத்தில் தனது மனைவியுடன் சென்ற புகைப்படத்தை பதிவு செய்துள்ள தயாரிப்பாளர் ரவீந்தர் இந்த தயவுசெய்து இந்த போட்டோவை யாரும் அப்படி போடாதீங்கடா, செஞ்சிடாதிங்கடா' என பதிவு செய்துள்ளது

பீச்சில் பிகினி உடையுடன் பிறந்த நாள் கொண்டாடிய ஸ்ரேயா.. குழந்தையுடன் விளையாடும் செம வீடியோ!

நடிகை ஸ்ரேயா சரண் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், குழந்தையுடன் பீச்சில் பிகினி உடையுடன் செம ஜாலியாக விளையாடும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

குழந்தை பிறந்த 3 மாதத்தில் மாலத்தீவு.. பிகினியில் கிளாமர் காட்டும் சூர்யா-கார்த்தி பட நடிகை

சூர்யா மற்றும் கார்த்தி படங்களில் நடித்த நடிகை ஒருவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் குழந்தை பிறந்த நிலையில் தற்போது அவர் மாலத்தீவில் பிகினி உடையுடன் இருக்கும் புகைப்படத்தை

செளந்தர்யா ரஜினிக்கு 2வது ஆண் குழந்தை.. பெயர் என்ன தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இரண்டாவது மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் கர்ப்பமான நிலையில் அவருக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.