close
Choose your channels

தளபதி விஜய்யின் 'வாரிசு' ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதுவா?

Monday, October 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி குறித்த தகவல் இணையத்தில் கசிந்து வருவது விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய், ராஷ்மிகா மந்தனா நடிப்பில், வம்சி இயக்கத்தில், ராஜு தயாரிப்பில் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் ‘வாரிசு’ படத்தின் புரமோஷன் பணிகளை துவக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகவும் அதில் முதல்கட்டமாக ‘வாரிசு’ படத்தின் சிங்கிள் பாடலை வரும் தீபாவளி விருந்தாக ரசிகர்களுக்கு அளிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தீபாவளி திருநாள் 24ஆம் தேதி கொண்டாட இருக்கும் நிலையில் 23ஆம் தேதி ‘வாரிசு’ படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸாக வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு அக்டோபர் 20 அல்லது 21 ஆம் தேதி வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்திற்காக தமன் அட்டகாசமான பாடல்களை கம்போஸ் செய்திருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் தீபாவளி விருந்தாக வெளியாகும் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய், ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.