சென்னை மெட்ரோவில் தளபதி விஜய்யின் 'வாரிசு': வேற லெவல் புரமோஷன்!

தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளிவந்து மிகப்பெரிய அளவில் இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் வேற லெவலில் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக சென்னை மெட்ரோ ரயிலில் ’வாரிசு’ படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த மாஸ் புரமோஷனை பார்த்து ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’கபாலி’ திரைப்படம் விமானங்களிலும் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் ரயில்களிலும் புரமோசன் செய்யப்பட்ட நிலையில் தற்போது தளபதியின் ’வாரிசு’ படமும் அதே போல் பிரமாண்டமாக புரமோஷன் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.

More News

ஒரு ஜீன்ஸ் விலை சுமார் ஒரு கோடி ரூபாயா? அப்படி என்ன இருக்கு அதில்?

அமெரிக்காவில் உள்ள ஏல நிறுவனத்தில் நடந்த ஏலம் ஒன்றில் ஒரு ஜீன்ஸ் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை ஏலம் போனதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

இந்த வார நாமினேஷன் பட்டியல்: யார் யார் தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சி 63 நாள் முடிவடைந்து தற்போது 64வது நாள் இன்று ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் என்பதும் அதில் ஒரு போட்டியாளர்

முதன்முறையாக இணையும் ஜீ வி பிரகாஷ் குமார் - ஐஸ்வர்யா ராஜேஷ்

'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து  நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நேற்று சிறப்பாக நடைபெற்றது.

கேம் ஷோவில் அரசியல் கலந்தால் இப்படித்தான்.. பாலாஜியின் விமர்சனம் யாருக்கு?

பிக்பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களையும் தாண்டி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான விக்ரமன்

'கமல்ஹாசன் 234' படத்தில் இணைந்த 'பொன்னியின் செல்வன்' பிரபலம்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் 'கமல்ஹாசன் 234' திரைப்படத்தில் 'பொன்னியின் செல்வன்' பிரபலம் இணைந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.