தளபதி விஜய்யின் 'வாரிசு': செம அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

  • IndiaGlitz, [Friday,December 02 2022]

தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்பா பணிகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளையும் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே என்ற முதல் சிங்கிள் பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி இணையதளமே ஸ்தம்பித்தது என்று தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன் ‘வாரிசு’ திரைப்படத்தின் 2வது சிங்கிள் பாடல் வரும் டிசம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

‘தீ’ என்று தொடங்கும் இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார் என்பதும் தமன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலும் ‘ரஞ்சிதமே’ பாடல் போல் மிகப் பெரிய அளவில் வைரலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

விஜய்-ரன்வீர் சிங் படத்தை இயக்குகிறாரா? பிரபல இயக்குனர் தகவல்!

பாலிவுட் திரையுலகின் பிரபல இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் உருவான 'சர்க்கஸ்' திரைப்படம் வரும் 23ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகி

'ஜெயிலர்' படப்பிடிப்பு நடக்கும்போது நெல்சன் எங்கே சென்றுள்ளார் பாருங்கள்? வைரல் புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த  படத்தின் படப்பிடிப்பு 50 சதவீத முடிவு விட்டதாக

ஒரே படத்தில் வெற்றிமாறன், பா ரஞ்சித் மற்றும் வெங்கட்பிரபு: டிசம்பர் 5ல் டீசர்

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களான வெற்றிமாறன், பா ரஞ்சித் மற்றும் வெங்கட் பிரபு ஆகிய மூவரும் ஒரே படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்ற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில்

கதை மட்டுமே படத்தை வெற்றி பெற செய்யும்.. 'வாரிசு', 'துணிவு' குறித்து விஷ்ணுவிஷால்!

விஷ்ணு விஷால் நடித்த 'கட்டா குஸ்தி' என்ற திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது என்பதும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது என்பதும் தெரிந்ததே.

யாரைடா சிம்ப்ளி வேஸ்ட்டுன்னு சொல்றிங்கடா டேய்.... மைனா ஆவேசம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது என்பதும் இந்த முறை வித்தியாசமாக 24 மணி நேர நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது என்று தெரிந்ததே.