close
Choose your channels

குழந்தை நட்சத்திரங்களுடன் 'வாரிசு' விஜய்: மாஸ் செகண்ட்லுக்

Wednesday, June 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளதை அடுத்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘வாரிசு’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி விஜய் ரசிகர்களை குஷிப்படுத்திய படக்குழுவினர் சற்றுமுன் இரண்டாவது லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் விஜய், குழந்தை நட்சத்திரங்களுக்கு நடுவில் உட்கார்ந்து இருக்கும் போஸ் உள்ளது. இந்த போஸ்டரை தற்போது விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

மேலும் இன்று மாலை 5 மணிக்கு ‘வாரிசு’ படத்தின் மூன்றாவது லுக் போஸ்டரும் வெளியாக உள்ளதை அடுத்து அந்த போஸ்டருக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

ஏற்கனவே இந்த படத்தில் குழந்தை நட்சத்திரங்கள் சிலர் நடித்து வருவதாக தகவல் வெளியான நிலையில் இந்த இரண்டாவது லுக் போஸ்டரில் மட்டுமே ஆறு குழந்தை நட்சத்திரங்கள் இருப்பதை அடுத்து இந்த படம் கலகலப்பான ஒரு குடும்ப சப்ஜெக்ட் படம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை வம்சி இயக்கவுள்ளர. தில் ராஜூ தயாரிப்பில் தமன் இசையில் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண கே.எல் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.