close
Choose your channels

தீபாவளிக்கு 'வாரிசு' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. பாடியவர்கள் இந்த பிரபலங்களா?

Friday, September 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வரும் தீபாவளி அன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில், தமன் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது.

இந்த நிலையில் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக இந்த படத்தின் சிங்கிள் பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பாடலை பிரபல பாடகர்களான சித் ஸ்ரீராம் மற்றும் ஜொனிதா காந்தி ஆகிய இருவரும் பாடி இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் ஜொனிதா காந்தி பாடிய அனைத்து பாடல்களும் ஹிட் என்பதும், குறிப்பாக விஜய் நடித்த 'பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற ’அரபிக்குத்து’ பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானது என்பது தெரிந்ததே. அதேபோல் சித் ஸ்ரீராம் பாடிய பாடல் அனைத்து பாடல்களுமே கிட்டத்தட்ட சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சித் ஸ்ரீராம் மற்றும் ஜொனிதா காந்தி பாடும் இந்த பாடல் மிகப் பெரிய ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.