'வாரிசு' தெலுங்கு ரிலீஸ் திடீர் ஒத்திவைப்பு.. 2 முக்கிய காரணங்கள்!

  • IndiaGlitz, [Monday,January 09 2023]

தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படம் ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் இந்த படத்தின் தெலுங்கு ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகி இருக்கும் நிலையில் இந்த படம் இரு மொழிகளிலும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தமிழில் ’வாரிசு’ திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் தெலுங்கில் ஜனவரி 14-ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 2 முக்கிய காரணங்கள் என்னவெனில் தெலுங்கில் இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ஜனவரி 12, மற்றும் 13ஆம் தேதி ரிலீஸ் ஆவதுதான்.

ஜனவரி 12-ஆம் தேதி என்டிஆர் பாலகிருஷ்ணா நடித்த ’வீரசிம்ம ரெட்டி’ மற்றும் ஜனவரி 13-ஆம் தேதி சிரஞ்சீவி நடித்த ’வால்டர் வீரய்யா’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளியாகவுள்ளது. எனவே தியேட்டர் பற்றாக்குறை காரணமாக ஜனவரி 14ஆம் தேதி ’வாரிசு’ திரைப்படம் தெலுங்கில் ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதனால் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள விஜய் ரசிகர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

More News

என்னது விக்ரமனை நாமினேட் பண்ணலையா?

இந்த சீசனின் கடைசி நாமினேஷன் இன்று நடந்த நிலையில் விக்ரமனை அசீம் நாமினேட் செய்யாதது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 

20 வருடங்களுக்கு முன்பே என் அம்மாவிடம் ஆசி பெற்றவர் அஜித்.. 'துணிவு' நடிகரின் மலரும் நினைவுகள்!

20 வருடங்களுக்கு முன்பே அஜித் என் அம்மாவிடம் ஆசி பெற்றுள்ளார் என மலரும் நினைவுகளை 'துணிவு' படத்தில் நடித்த பிரபல நடிகர் பகிர்ந்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ரக்சிதாவுக்கு இத்தனை லட்சம் சம்பளமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் நேற்று ரக்சிதா வெளியேறினார் என்பது நிகழ்ச்சியை பார்த்த அனைவருக்கும் தெரிந்திருக்கும். அந்தவகையில் நேற்று வெளியேறிய

விஜய் டிவி பிரபலத்திற்கு கோல்டன் விசா.. வைரல் புகைப்படங்கள்

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருந்து வரும் ஒருவருக்கு ஐக்கிய அரபு நாட்டின் கோல்டன் விசா கிடைத்து உள்ளதை அடுத்து அது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. 

நீச்சல் குளத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்.. செம வைரல் புகைப்படங்கள்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ், நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அவை மிகப் பெரிய அளவில் இணைதளங்களில்