close
Choose your channels

அரசியல்ல புகுந்து விளையாடுங்க.. பிகில் ஆடியோ விழாவில் தளபதியின் மாஸ் பேச்சு

Thursday, September 19, 2019 • தமிழ் Comments

தளபதி விஜய் நடிப்பில் உருவான ‘பிகில்’ படத்தின் ஆடியோ விழா இன்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் விஜய் பேசிய சில சுவாரஸ்யமான அம்சங்கள்

* வாழ்கைல அவங்க மாதிரி இவங்க மாதிரி வரணும்னு ஆசை படாதீங்க, அதுக்கு தான் அவங்களே இருக்காங்களே.. நீங்க நீங்களா வாங்க

* அரசியல்ல புகுந்து விளையாடுங்க, பட் விளையாட்டில அரசியல கொண்டு வராதீங்க

* பேனரால் இறந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு என்னோட ஆறுதல்.! இது போன்ற சமூக பிரச்சனைக்கு ஹாஷ் டாக் போடுங்க சமூக பிரச்சனைல கவனம் செலுத்துங்க, தேவையில்லாத விஷயத்தை ஹேஷ்டேக் செய்ய வேண்டாம்.

* சுபஸ்ரீ விஷயத்தில யாரை கைது செய்யணுமோ அவங்கள கைது செய்யாமல் பிரிண்டிங் பிரஸ் வைத்தவரை கைது பண்ணியிருக்காங்க

* எதிரியா இருந்தாலும் மதிக்கணும், ஒருமுறை எம்ஜிஆரிடம் கலைஞர் குறித்து தவறாக பேசிய் அமைச்சரை வெளியே போ’ என எம்ஜிஆர் கூறினார்

* வாழ்க்கையும் கால்பந்து விளையாட்டு போன்றது தான். நாம கோல் போட ட்ரை பண்ணுவோம், அதை தடுக்க ஒரு கூட்டம் வரும். நம்ம கூட இருக்குறவனே சிலசமயம் சேம்சைட் கோல் போடுவான். 

* யாரோட அடையாளத்தையும் ஏத்துகாதீங்க, உங்களுக்குன்னு ஒரு அடையாளத்தை உருவாக்குங்க. புடிச்சா ஏத்துக்கோங்க

* எவன எங்க உட்கார வைக்கணுமோ, அவன அங்கே உட்கார வச்சிங்கன்னா, எல்லாம் கரெக்டா இருக்கும். 

Get Breaking News Alerts From IndiaGlitz