close
Choose your channels

விஜய்யின் காஸ்ட்யூம் டிசைனருக்கு ஆண் குழந்தை: குவியும் வாழ்த்துக்கள்!

Thursday, December 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய்யின் ஒரு சில படங்கள் உள்பட பல தமிழ் திரைப்படங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனராக பணி புரிந்தவருக்கு சற்று முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

விஜய் நடித்த ’பைரவா’, ‘தெறி’ ஆகிய படங்களுக்கு காஸ்ட்டியூம் டிசைனராக பணிபுரிந்தவர் ‘என்.ஜே.சத்யா. இவர் தனது நீண்டநாள் காதலரை கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்த நிலையில் சமீபத்தில் கர்ப்பமானார். இந்த நிலையில் காஸ்ட்யூம் டிசைனர் சத்யாவுக்கு சற்று முன் ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்தோஷமான தகவல் சத்யாவின் சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

விஜய் நடித்த ’பைரவா’, ‘தெறி’, சிவகார்த்திகேயன் நடித்த ’மான்கராத்தே’ ஆர்யா நடித்த ’ராஜாராணி’ உள்பட பல திரைப் படங்களுக்கு காஸ்ட்டியூம் டிசைனராக பணிபுரிந்த சத்யா, கிடாரி, வெற்றிவேல், கனா உள்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.