விஜய்யின் அட்டகாசமான ஸ்டெப்ஸ், பூஜா ஹெக்டேவின் கிளாமர் டான்ஸ்: அரபிக்குத்து பாடல் ரிலீஸ்

தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் அரபிக்குத்து பாடல் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது

சிவகார்த்திகேயன் பாடல் வரிகளில் அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி குரலில் உருவாகியுள்ள இந்தப் பாடலில் தளபதி விஜய்யின் வழக்கமான அட்டகாசமான ஸ்டெப்ஸ் உள்ள காட்சிகளும், பூஜாவின் கிளாமர் டான்ஸ் காட்சிகளும் உள்ளதை அடுத்து விஜய் ரசிகர்களுக்கு இந்த பாடல் காதலர் தின விருந்தாக அமைந்துள்ளது.

விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள இந்த திரைப்படத்தில் செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ்உள்பட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

காதலில் விழ வேண்டாம்… நடிகை சினேகாவின் வெளியிட்ட க்யூட் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் நடிகை சினேகா

ஏமாற்றிய ஐபிஎல்… சுரேஷ் ரெய்னாவின் அடுத்த பிளான் குறித்த சுவாரசியத் தகவல்!

15 ஆவது சீசன் போட்டிகளுக்கான ஐபிஎல் ஏலம் நடந்துமுடிந்தது

'கிஸ் பண்ண ஒருத்தன் பிறந்துதான் வரணும்': ராதே ஷ்யாம் காதலர் தின வீடியோ!

பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள 'ராதேஷ்யாம்' திரைப்படம் மார்ச் 11ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் காதலர்தின சிறப்பு வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தனுஷின் 'மாறன்', 'திருச்சிற்றம்பலம்' படங்களின் புதிய அப்டேட்டுக்கள்!

தனுஷ் நடித்து முடித்துள்ள 'மாறன்' மற்றும் 'திருச்சிற்றம்பலம்' ஆகிய படங்களின் புதிய அப்டேட்கள் தற்போது வெளியாகியுள்ளன.

வடிவேலுவை ஹீரோவாக வைத்து ஒரு முழுநீள காமெடி படம்: கெளதம் மேனன் திட்டம்

வடிவேலு நடிப்பில் ஒரு முழுநீள காமெடி படம் இயக்க வேண்டும் என்பது தனது நீண்ட கால திட்டம் என கவுதம் மேனன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.