அடுத்த பாட்டை ரிலீஸ் பண்ணலாமா? அனிருத் கொடுத்த 'பீஸ்ட்' மாஸ் அப்டேட்!

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்த படத்தின் முதல் நாள் வசூல் இந்திய அளவில் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ‘அரபிக்குத்து’ மற்றும் ’ஜாலியோ ஜிம்கானா’ ஆகிய இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி இரண்டு பாடல்களுமே உலகம் முழுவதும் ஹிட்டாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம் மூன்றாவது சிங்கிள் பாடல் விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்றுமுன் இசையமைப்பாளர் அனிருத் 'அடுத்த பாடலை ரிலீஸ் பண்ணலாமா? என்ற கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்நிலையில் ‘பீஸ்ட்’ படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் நாளை வெளியாகும் என சன்பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. இதனை அடுத்து நாளை இந்த பாடலை எதிர்பார்த்து விஜய் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சிவகுமாருடன் நடித்த நாயகிகள்: வைரலாகும் குரூப் போட்டோ!

பழம்பெரும் நடிகரும் சூர்யா மற்றும் கார்த்தியின் தந்தையுமான நடிகர் சிவக்குமாருடன் நடித்த நடிகைகளின் குரூப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தோனியின் மூளை எப்படி வேலை செய்கிறது? சுவாரசியமான ஆராய்ச்சியில் ஈடுபட்ட முக்கிய வீரர்!

இந்தியக் கிரிக்கெட்டில் முக்கிய ஜாம்பவனாக இருந்துவரும் மகேந்திரசிங் தோனியின் மனது எப்படி வேலை செய்கிறது என்பதைத்

'நானே வருவேன்': தனுஷின் மாஸ் புகைப்படத்தை வெளியிட்ட செல்வராகவன்!

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'நானே வருவேன்' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது என்பதும் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது

காதலருக்கு புதிய பெயர் வைத்த ஸ்ருதிஹாசன்: என்ன பெயர் தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் தனது காதலருக்கு செல்லப்பெயர் வைத்துள்ளதை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

நயன்தாரா மும்பை சென்றது இதற்காகத்தானா? வைரல் வீடியோ!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மும்பை விமான நிலையத்தில் இருந்து செல்லும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அவர் எதற்காக மும்பை சென்றார் என்ற செய்தி தற்போது கசிந்துள்ளது.