அஜித் கலந்து கொண்ட விஜய் திருமணம்... தளபதி மெட்டி போடும் அழகே தனி.. அரிய புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Saturday,January 21 2023]

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவரான விஜய்யின் திருமண புகைப்படங்கள் தற்போது திடீரென இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், இந்தியாவிலேயே அதிக சம்பளம் ஆகும் நடிகர்களில் ஒருவராக உள்ளார் என்பதும் அவரது ஒவ்வொரு திரைப்படங்கள் வெளியாகும் போது அவரது ரசிகர்கள் ஒரு பண்டிகை போல் கொண்டாடி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

சமீபத்தில் விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படம் வெளியான நிலையில் அந்த படம் 200 கோடி ரூபாய் வசூலை தாண்டி தற்போது 300 கோடி ரூபாய் என்ற இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் படங்கள் என்றாலே மினிமம் கேரண்டி என்பதால் அவரது படத்தை சமீப காலமாக வாங்கிய எந்த விநியோகிஸ்தர்களும் நஷ்டம் அடைந்ததே இல்லை என்பதுதான் வசூல் வரலாறு.

இந்த நிலையில் விஜய் கடந்த 1999 ஆம் ஆண்டு இலங்கை தமிழ் பெண்ணான சங்கீதா சொர்ணலிங்கம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஒரு ரசிகையாக விஜய்யை பார்க்க வந்த சங்கீதா அதன் பிறகு தனது மனதை பறிகொடுத்ததை அடுத்து இரு தரப்பு பெற்றோர்களும் இந்த திருமணத்தை நடத்தி வைத்தனர்.

இந்த திருமணத்தில் விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான அஜித் உள்பட பல திரையுலக பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர் என்பதும் இந்த திருமணம் குறித்த பல புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகிருந்தாலும் தற்போது சில அரிய புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகி வருகின்றன.

குறிப்பாக விஜய்யின் திருமணத்தில் அஜித் கலந்து கொண்டது, விஜய் தனது மனைவிக்கு காலில் மெட்டி அணிந்தது, தாலி கட்டியது உள்பட ஒருசில அரிய புகைப்படங்களை விஜய் ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகின்றனர்.

More News

என்ன ஒரு தைரியம்?  குளத்தில் இறங்கி யானையை குளிப்பாட்டும் நடிகை: வைரல் வீடியோ

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட பல மொழிகளில் நடித்த நடிகை ஒருவர் குளத்தில் இறங்கி இரண்டு யானைகளை குளிப்பாட்டும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ

பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவரா?

கடந்த நூறு நாட்களுக்கு மேல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நாளை மறுநாள் முடிவடைய போகிறது என்பதும் உலக நாயகன் கமலஹாசன் நாளை மறுநாள் டைட்டில் வின்னர் யார் எ

மிட்வீக் எவிக்சனில் வெளியேறிய போட்டியாளர் இவரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் முடிவடையும் நிலையில் இந்த சீசனில் சில புதுமையான அம்சங்களை பார்த்து வருகிறோம். 

கதறி அழும் விக்ரமன்... என்ன காரணம்?

பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரண்டு நாட்களில் நிறைவடை இருக்கும் நிலையில் இந்த சீசனின் டைட்டிலை வெல்வார் என்று எதிர்பார்க்கப்படும் விக்ரமன் கதறி அழும் வீடியோ

முகேஷ் அம்பானியின் மகன் திருமணம்.. குவிந்த பாலிவுட் பிரபலங்கள்!

இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இரண்டாவது மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பாலிவுட் திரை உலகின் பிரபலங்கள் குவிந்தனர்.