சென்னை திரும்பினார் விஜய்.. அடுத்தது 'தளபதி 67' படப்பிடிப்பா?

  • IndiaGlitz, [Monday,November 14 2022]

தளபதி விஜய் நடித்து வரும் ’வாரிசு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகளும் நடைபெற்று வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் விரைவில் ’தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பில் விஜய் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் விஜய் தனது குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு ஓய்வெடுக்க சென்றிருந்தார் என்று கூறப்பட்ட நிலையில் விஜய் தற்போது மீண்டும் சென்னை திரும்பி விட்டதாகவும் இதையடுத்து அவர் ’தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பில் விரைவில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிகிறது.

ஆனால் தற்போது வந்துள்ள தகவலின் படி ’வாரிசு’ திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சி இன்னும் படமாக்கப்பட உள்ளதாகவும் அந்த படப்பிடிப்பில் விஜய் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த பாடல் காட்சியின் படப்பிடிப்பு கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெல்லாரியில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் ’வாரிசு’ படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும் இந்த படத்தை பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’வாரிசு’ படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தளபதி விஜய் மற்றும் எம்எம் மானஸி குரலில் உருவான இந்த பாடல் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றது என்பதும் தெரிந்ததே.

இதனையடுத்து ’வாரிசு’ அடுத்த சிங்கிள் பாடல் வெளியிடும் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக இசையமைப்பாளர் தமனின் பிறந்த நாளான நவம்பர் 16-ஆம் தேதி இந்த பாடல் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய், ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகிறது.

More News

நடிகர் கார்த்தியின் ஃபேஸ்புக் பக்கத்திற்கு வந்த திடீர் சிக்கல்.. ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் கார்த்தியின் பேஸ்புக் பக்கத்திற்கு திடீரென ஏற்பட்ட சிக்கலால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இந்த வாரம் தனலட்சுமி தான் டார்கெட்டா? நாமினேஷன் பட்டியல்!

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் படலம் நடைபெறும் என்றும் அன்றைய தினம் நாமினேஷனில் சிக்கியவர்கள் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை

ரஜினிகாந்த் எனக்கு உதவவில்லையா? புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபலம் விளக்கம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உதவியாளராக பல ஆண்டுகள் இருந்த சுதாகர் என்பவர் ரஜினியின் ரஜினி மக்கள் மன்றத்தின் முன்னாள் நிர்வாகியாகவும் இருந்தார்.

சினேகா-பிரசன்னா விவாகரத்தா? இந்த புகைப்படம் கூறும் உண்மை என்ன?

தமிழ் திரை உலகின் நட்சத்திர தம்பதிகளில் ஒன்றான சினேகா மற்றும் பிரசன்னா ஆகிய இருவரும் பிரிய போவதாகவும் விவாகரத்து பெற இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வரும் நிலையில்

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவுடன் மகேஸ்வரியின் முதல் வீடியோ: என்ன சொல்லியிருக்கார் பாருங்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று குறைந்த வாக்குகளின் அடிப்படையில் மகேஸ்வரி எலிமினேட் செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே.