விஜய் மகன் சஞ்சய் லேட்டஸ்ட் புகைப்படம்: ஹீரோ லுக் என குவியும் கமெண்ட்ஸ்!

  • IndiaGlitz, [Tuesday,June 08 2021]

தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் திரைப்பட படிப்பு படித்து முடித்துவிட்டு தற்போது சென்னை திரும்பியுள்ளார் என்பது தெரிந்ததே. அவர் விரைவில் தமிழ் திரை உலகில் இயக்குனர் அல்லது நடிகராக அறிமுகமானவர் என்று கூறப்படுகிறது. அவருடைய முதல் படம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் மகன் சஞ்சய் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. குறிப்பாக சமீபத்தில் சஞ்சய் காரில் செல்லும் வீடியோ மிகப்பெரிய அளவில் சமூக தளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அவர் தன்னுடைய நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் சஞ்சயை பார்த்த பலரும் சஞ்சய்க்கு ஹீரோ லுக் வந்துவிட்டது என்றும் அவர் தைரியமாக ஹீரோவாக அறிமுகமாகலாம் என்றும் கமெண்ட்ஸ்களை குவித்து வருகின்றனர்.

More News

'மாநாடு' படத்தின் முக்கிய உரிமையை பெற்ற யுவன்: ஃபர்ஸ்ட் சிங்கிள் தேதி குறித்த தகவல்!

சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாநாடு'.

'சூர்யா 40' படத்திற்கு மாஸ் டைட்டில்: பிறந்த நாளில் அப்டேட் தந்த இயக்குனர் பாண்டிராஜ்!

சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'சூர்யா 40'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த

இன்னும் 3 வருடங்களுக்கு அந்த தனுஷை பார்க்க முடியாது: டுவிட்டர் ஸ்பேஸில் தனுஷ் பேட்டி

டுவிட்டர் ஸ்பேஸ் தளத்தில் தனுஷ் உரையாடிய சில கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டுவிட்டர் ஸ்பேஸ் தளத்தில் 'ஜகமே தந்திரம்' குழுவினர் உரையாடியபோது,

தனுஷின் ரசிகையாக மாறிவிட்டேன்: 'சில்லுன்னு ஒரு காதல்' குட்டிப்பாப்பா ஸ்ரேயா ஷர்மா பேட்டி!

சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடித்த வெற்றி திரைப்படங்களில் ஒன்று 'சில்லுனு ஒரு காதல்'என்பதும் இந்த படத்தில் சூர்யா ஜோதிகா மகளாக நடித்த குழந்தை நட்சத்திரம் ஸ்ரேயா ஷர்மாவின்

மகத்-பிராய்ச்சி மிஸ்ரா தம்பதிக்கு ஆண் குழந்தை: புகைப்படம் வைரல்

நடிகரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான மகத், கடந்த ஆண்டு பிராய்ச்சி மிஸ்ரா என்ற மாடல் அழகியை திருமணம் செய்து கொண்டார் என்பது தெரிந்ததே..