close
Choose your channels

சென்னை விமான நிலையத்தில் தளபதி விஜய்: வைரல் புகைப்படங்கள், வீடியோ!

Sunday, July 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை விமான நிலையத்தில் தளபதி விஜய் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் தற்போது ’வாரிசு’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்தது.

முதல் கட்டமாக இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள பிரமாண்டமான செட்டில் நடைபெற்ற நிலையில் அடுத்த கட்டமாக சென்னையில் நடைபெற்றது. இந்த நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு மீண்டும் ஐதராபாத்தில் நடைபெற உள்ள நிலையில் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் ஐதராபாத் சென்றார். இதற்காக அவர் சென்னை விமான நிலையத்திற்கு வந்தது, பயணிகளுடன் வரிசையில் நின்றது ஆகிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இன்னும்போது சில வாரங்கள் ’வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெறும் என்றும் இந்த படப்பிடிப்பின் பெரும்பாலான இந்த படத்தின் படப்பிடிப்புடன் நிறைவு பெறும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இதனை அடுத்து வெளிநாட்டில் 2 பாடல் காட்சிகள் படமாக்கப்பட வேண்டியது இருப்பதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை வம்சி இயக்கவுள்ளார். தில் ராஜூ தயாரிப்பில் தமன் இசையில் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண கே.எல் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.