இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்! தளபதி விஜய் ட்வீட்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட் என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்கியதில், அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். குறிப்பாக, அவர்கள் இந்துக்கள் என அறியப்பட்டு அதன் பிறகு கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயாராகி வந்தது. இன்று நாடு முழுவதும் போர் ஒத்திகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென இன்று அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதிகளில் இந்திய ராணுவம் தாக்கியது.
இதன் மூலம் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலுக்கு பிரபல அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உட்பட பலரும் இந்திய ராணுவத்திற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், தளபதி விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் “இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்” என பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ் குவிந்து வருகிறது.
இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்!
— TVK Vijay (@TVKVijayHQ) May 7, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments