தளபதி விஜய்யின் 'வாரிசு': படப்பிடிப்பு குறித்த மாஸ் தகவல்!

  • IndiaGlitz, [Sunday,August 14 2022]

தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்று வருகிறது என்பதும் இங்கு அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்ததாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்தநிலையில் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நடந்த ‘வாரிசு’ படப்பிடிப்பு தற்போது முடிந்து விட்டதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன் பின்னர் சென்னையில் மீண்டும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும், அத்துடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ‘வாரிசு’ படத்தின் முதல் பாடல் வரும் தீபாவளி அன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும், படத்தை பொங்கல் தினத்தில் வெளியிடவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது..

‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை அடுத்து இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த படத்தின் ஒட்டு மொத்த படப்பிடிப்பை முடித்துவிட்டு விஜய் 'தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பில் இந்த ஆண்டு இறுதியில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘வாரிசு’ படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து வரும் இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு உள்பட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண கே.எல் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகிறது. இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

More News

3 மடங்கு லாபம் கொடுத்த சூப்பர்ஹிட் படம்: ஷங்கருக்கு நன்றி சொன்ன சரத்குமார்!

 சரத்குமார் நடித்த சூப்பர்ஹிட் படம் வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகள் ஆனதை அடுத்து அந்த படத்தின் மலரும் நினைவுகளை பகிர்ந்து உள்ள நடிகர் சரத்குமார், இயக்குனர் ஷங்கர் உள்பட படக்குழுவினர்களுக்கு

பிரிட்டிஷ் மகாராணி முன் பேசிய வசனம்: சுதந்திர தின வாழ்த்து செய்தியில் கூறிய கமல்!

 இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை நாடு முழுவதும் பொது மக்கள் கொண்டாடி வரும் நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் பிரிட்டிஷ் ராணியின் முன் சுதந்திரம் குறித்து பேசிய வசனத்தை

30 ஆண்டுகள் செய்தி வாசித்த பிரபலம் காலமானார்: பொதுமக்கள் இரங்கல்

அகில இந்திய வானொலியில் 30 ஆண்டுகள் செய்தி வாசிப்பாளராக இருந்த சரோஜ் நாராயணசுவாமி காலமானார். அவருக்கு வயது 87.

'என்ன கொடுமை இது': நயன்தாரா கெட்டப் போட்ட பிக்பாஸ் நடிகை குறித்து விக்னேஷ் சிவன் கமெண்ட்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா கெட்டப்பில் இருக்கும் பிக்பாஸ் நடிகையின் புகைப்படத்திற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் கொடுத்த கமெண்ட்ஸ் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

'என்னை ரொம்ப கொடுமைப்படுத்துறாங்க: விஜய் டிவி பிரபலத்தின் வீடியோ வைரல்!

 என்னை ரொம்ப கொடுமை கொடுமைப்படுத்துறாங்க என விஜய் டிவி பிரபலம் ஒருவர் கூறும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.