close
Choose your channels

தளபதி விஜய்க்கு கிடைத்த சர்வதேச அளவிலான மரியாதை

Sunday, September 23, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு விருதுகளை பெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் 'மெர்சல்' திரைப்படம் IARA விருதுக்கு சென்றுள்ளது என்பதையும், 'சிறந்த சர்வதேச நடிகர்' என்ற விருதுக்கு விஜய்யின் பெயர் நாமினேட் செய்யப்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

தற்போது இந்த விருதுகளின் முடிவுகள் வெளிவந்துள்ளது. தளபதி விஜய் அனைவரும் எதிர்பார்த்தபடியே சிறந்த சர்வதேச விருதினை வென்றுவிட்டார். IARA விருதுகளில் சர்வதேச விருதை பெற்ற ஒரே தமிழ் நடிகர் என்ற பெருமை விஜய்க்கு கிடைத்துள்ளது.

சிறந்த சர்வதேச விருது பெற்ற விஜய்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருவதால் இதுகுறித்த ஹேஷ்டேக் ஒன்று இந்திய அளவில் டிரெண்டுக்கு வந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.