close
Choose your channels

'தளபதி 63' பர்ஸ்ட்லுக் எப்போது?

Thursday, January 24, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'தெறி', 'மெர்சல்' ஆகிய இரண்டு வெற்றிப்படங்களை அடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வரும் ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்த நாளன்று வெளிவர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்த படத்தை வரும் தீபாவளி தினத்தில் வெளியிடவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

கால்பந்து விளையாட்டு பயிற்சியாளராக விஜய் நடிக்கும் இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கவுள்ளார். மேலும் 'பரியேறும் பெருமாள்' கதிர், யோகிபாபு, ரோபோசங்கர், விவேக், தீனா, டேனியல் பாலாஜி, ஆனந்த்பாபு உள்பட பலர் நடிக்கவுள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.