'தளபதி 63' முதல் அப்டேட்: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

  • IndiaGlitz, [Wednesday,June 19 2019]

தளபதி விஜய் நடித்து வரும் 63வது படத்தை இதுவரை 'தளபதி 63' என்றே அழைத்து வந்த விஜய் ரசிகர்கள் இனி இந்த படத்தின் உண்மையான டைட்டிலை அழைக்கும் நேரம் நெருங்கிவிட்டது.

இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதியிடம் அப்டேட் கேட்டுக்கொண்டு வந்த ரசிகர்களுக்கு தற்போது அப்டேட் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. 'தளபதி 63' படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பையே விஜய் ரசிகர்கள் கொண்டாட்டமாக கொண்டாடி வருகின்றனர். வரும் 22ஆம் தேதி விஜய் பிறந்த நாள் அன்று டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வரும் என்பதே இன்று மாலை வெளியாகும் அப்டேட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். விஷ்ணு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது