'ஆளப்போறான் தமிழன்' பாடலின் மேலும் இரண்டு வரிகள்!

  • IndiaGlitz, [Thursday,August 10 2017]

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற 'ஆளப்போறான் தமிழன்' பாடலின் வீடியோ டீசர் நேற்று வெளியாகி இணையதளங்களில் டிரெண்டாகி வருகிறது. ஆளப்போறான் தமிழன், "தமிழாலே ஒன்னானோம், மாறாது எந்நாளும் போன்ற வரிகள் எதை குறிக்கின்றது என்பது குறித்து இணையதளங்களில் விஜய் ரசிகர்கள் ஒரு விவாதமே நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த பாடலின் மேலும் இரண்டு வரிகளை இந்த பாடலை எழுதிய பாடலாசிரியர் விவேக் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
"அன்பக் கொட்டி எங்க மொழி அடித்தளம் போட்டோம்..
மகுடத்தத் தரிக்கிற 'ழ'கரத்தச் சேத்தோம்"
என்பதுதான் அந்த வரிகள். இந்த வரிகளில் இருந்து இந்த பாடல் தமிழ், மற்றும் தமிழர்களின் பெருமை குறித்து குறிப்பிடும் பாடலாக இருக்கும் என்பது உறுதியாகிறது.
மேலும் பாடலசிரியர் விவேக் சமூக வலைத்தளத்தில் ஒரு ரசிகர், 'எம்ஜிஆருக்கு ஒரு வாலி, ரஜினிக்கு ஒரு வைரமுத்து, தளபதி விஜய்க்கு ஒரு விவேக்' என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த விவேக், 'இந்த புகழுரையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இருப்பினும் தான் கடினமாக உழைத்து நல்ல பாடல்களை கொடுக்க முயற்சி செய்வேன்' என்று கூறியுள்ளார்.

More News

4 நண்பர்களுடன் இணையும் தோழி: 'கூட்டாளி' படத்தின் வித்தியாசமான கதை

பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்ட நான்கு நண்பர்கள், அவர்களோடு தோழியாக இணையும் ஒரு பெண், அதனால் வாழ்விலும் தொழிலிலும் ஏற்படும் பிரச்சினைகள், அதனை அவர்கள் எதிர்கொள்ளும் விதம் குறித்து வித்தியாசமான கதையுடன் உருவாகி வரும் திரைப்படம் 'கூட்டாளி'

மாட்டை அடக்க பாஸ்வேர்ட்; அனிமல் ஸ்டார் சாம்பார் ராஜனின் வித்தியாசமான பாணி

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் முதல் சுப்ரீம் ஸ்டார் வரை பல பட்டங்கள் நடிகர்களுக்கு கிடைத்துள்ள நிலையில் அறிமுகப்படத்திலேயே அனிமல் ஸ்டார் என்ற பட்டத்துடன் நடிக்க வருகிறார் சாம்பார் ராசன்...

தன்யா ராஜேந்திரன் விவகாரம்: விஜய் வெளியிட்ட அறிக்கை

பெண் பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன் விஜய்யின் 'சுறா' படம் குறித்து எதிர்மறை பதிவு ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததால் விஜய் ரசிகர்கள் அவரை மோசமாக விமர்சனம் செய்ததாக புகார் எழுந்தது...

தமிழாலே ஒன்னானோம் மாறாது எந்நாளும் மெர்சல் பட டீசர் கூறுவது என்ன?

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் சிங்கிள் டீசர் வீடியோ நேற்று நள்ளிரவு சரியாக 12 மணிக்கு இணையதளத்தில் வெளியாகி பெரும் சுனாமியை ஏற்படுத்தியது...

சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் நயன்தாரா?

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கியுள்ள 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பான போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணியில் உள்ளது. இந்த படம் வரும் ஆயுதபூஜை தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...